மனசை திடப்படுத்திக்கோங்க ரஜினி ரசிகாஸ்.. வேட்டையன் ரிலீஸ் லேட் ஆகிறதா
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -ஞானவேல் கூட்டணியில் உருவாகிவரும் படம் வேட்டையன். இந்தப் படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது தூத்துக்குடியில் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கிற்காக உற்சாக கிளம்பிப் போன நடிகர் ரஜினிகாந்த், சில தினங்களிலேயே விஜயகாந்த் காலமானதையொட்டி சென்னை திரும்பினார். விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தினார். விரைவில் அவர் வேட்டையன் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.
ஜெயிலர் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்தின் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி. படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார் ரஜினி. ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இந்த ஜோடியும் சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்தில் வசந்த் ரவி வில்லனாக அமைந்தது எதிர்பார்க்காததாக அமைந்தது.
லால் சலாம் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து லால் சலாம் படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். தன்னுடைய மூத்த மகளின் இயக்கத்தில் இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் ரஜினி நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிலேயே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் வேட்டையன் படமும் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.
தள்ளிப்போகும் வேட்டையன் ரிலீஸ்: இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப் போகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறுகிய கால தயாரிப்பாகவே இந்தப் படம் திட்டமிடப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசை தீபாவளி பண்டிகையையொட்டி படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் கதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தலைவர் 171 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்று முன்னதாக லோகேஷ் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார். ஏப்ரல் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்குவதற்கு முன்னதாக படத்தின் டைட்டில் டீசர் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் மேக்கிங்கை சிறிது காலம் எடுத்துக் கொண்டு செய்யவுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











