Actor Rajinikanth: இறுதிக்கட்டத்தில் வேட்டையன் சூட்டிங்.. லால் சலாம் இசை வெளியீட்டிற்காக காத்திருக்கும் டீம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது.

வேட்டையன் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களையும் பெற்றது.

லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Rajinikanths Vettaiyan movie shooting next schedule starts after Lal salaam music launch

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்த இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார் ரஜினிகாந்த். சாந்தமாக இந்தப் படத்தில் காட்டப்படும் ரஜினிகாந்த், தன்னுடைய மகனின் இழப்பை கேள்விப்பட்டு ஆக்ரோஷமாக மாறி பழிவாங்குவதை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது.

ஜனவரியில் ரிலீசாகும் லால் சலாம்: விஜய்யுடன் இணைந்து உருவாக்கியிருந்த பீஸ்ட் படத்தின் சொதப்பலையடுத்து வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நெல்சன், இந்தப் படத்தை சிறப்பாகவே கொடுத்திருந்தார். அனிருத் இசையில் பாடல்கள் மாஸ் காட்டின. இந்நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. வரும் ஜனவரியில் லால் சலாம் படம் ரிலீசாகவுள்ளது. அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மொய்தீன்பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

வேட்டையன் அடுத்த ஷெட்யூல்: ரஜினி பிறந்தநாளையொட்டி லால் சலாம் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு வரும் 21ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது. இதை தொடர்ந்தே வேட்டையன் படத்தின் அடுத்த ஷெட்யூல் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் துவங்கவுள்ளது. படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Actor Rajinikanths Vettaiyan movie shooting next schedule starts after Lal salaam music launch

ஒரு மாத சூட்டிங்: இன்னும் ஒரு மாதத்தில் வேட்டையன் படத்தின் சூட்டிங்கை ஒட்டுமொத்தமாக நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினிகாந்த், மக்களுக்காக போராடுவதாக கதைக்களம் அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஜெய்பீம் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ஞானவேல் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

அழுத்தமான கேரக்டரில் ரஜினி: அடுத்த ஆண்டில் ரஜினியின் நடிப்பில் ஜனவரியிலேயே லால் சலாம் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் ரஜினிக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் என்று கூறப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள ரஜினியின் கிளிம்ப்ஸ் மிரட்டியுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X