Rajinikanth: வேட்டையன் படத்தில் மிகப்பெரிய Gutsடன் நடித்த ரஜினிகாந்த்.. டிஜே ஞானவேல் சொல்றத பார்த்தா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சுவாரியர் பகத் ஃபாஸில், ராணா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்து 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான வேட்டையன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலில் அதிரடி காட்டி வருகிறது. இந்த படத்தை ஜெய் பீம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார்.

வேட்டையன் படம் தொடர்ந்து வசூலில் சிறப்பாக அமைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் இந்த படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட் சென்னையில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் டிஜே ஞானவேல், நடிகை ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

rajinikanth vettaiyan movie thanks giving meet

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்த் -அமிதாபச்சன் கூட்டணியில் 30 ஆண்டுகளை கடந்து உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்த படத்தை முன்னதாக ஜெய் பீம் என்ற சிறப்பான படத்தை கொடுத்திருந்த டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், ராணா, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இணைந்திருந்தனர். இந்த படத்தின் கதைக்களம் போலி என்கவுன்ட்டருக்கு எதிராக அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் போலி என்கவுண்டரை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரி ரஜினிக்கு ஃபிளாஷ்பேக்கில் காரணங்கள் அமைத்திருந்தனர்.


நடிகர் ரஜினிகாந்த்: அவரது இந்த செயல்பாட்டை எதிர்க்கும் உயரதிகாரியாக அமிதாப்பச்சனும் தன்னுடைய நடிப்பை வேட்டையன் படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக அமிதாச்பச்சன் சிறப்பாக ஸ்கோர் செய்திருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மஞ்சு வாரியர் காம்பினேஷனும் சிறப்பாக அமைந்திருந்தது. அவர்களின் ஆட்டத்தில் மனசிலாயோ பாடல் மிக சிறப்பாக ஏராளமான வியூஸ்களை யூடியூபில் குவித்த பாடலாக அமைந்திருந்தது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் பிஜிஎம்மிலும் அதிரடி காட்டியிருந்தார் அனிருத்.

ரஜினிகாந்தின் கட்ஸ்: ரஜினிக்கு என்றாலே அனிருத்திற்கு எங்கிருந்துதான் எனர்ஜி கிடைக்குமோ, ஜெயிலர் படத்தை தொடர்ந்து வேட்டையன் படத்திலும் அவர் ரசிகர்களை மிகச் சிறப்பாக கவர்ந்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட் சென்னையில் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் டிஜே ஞானவேல், நடிகை ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படத்தின் சக்ஸசிற்கு உதவிய ரசிகர்களுக்கும் உடன் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் டிஜே ஞானவேல், ஜெயிலர் என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் அடுத்ததாக கருத்துள்ள சப்ஜெக்ட்டில் இணைய நடிகர் ரஜினிகாந்த் விரும்பியதாகவும் இத்தகைய கட்ஸுடன் அவர் தன்னை அணுகியதாகவும் தெரிவித்துள்ளார்.

கதையை நம்பிய நடிகர்கள்: அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக இன்றளவும் அதிரடி காட்டி வருவதாகவும் டிஜே ஞானவேல் தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்தின் ஹிட் தனக்கு பிரஷர் கொடுக்கக்கூடாது என்றும் தன்னுடைய ஸ்டைலில் தான் வேட்டையன் படத்தை எடுக்க விரும்புவதாகவும் முன்னதாகவே தான் ரஜினியிடம் கூறிவிட்டதாகவும் டிஜே ஞானவேல் மேலும் தெரிவித்துள்ளார். ரஜினியை போலவே இந்தப் படத்தின் அனைத்து நடிகர், நடிகைகளும் கதையை நம்பியே வந்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு முழுமையான படைப்பு சுதந்திரத்தை கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


வெற்றியை சாத்தியப்படுத்திய ரசிகர்கள்: மேலும் மழை உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல் படத்தின் வெற்றியை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து கருத்துப்படமாக இருந்தபோதிலும் இந்தப் படத்தின் வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை கொடுப்பதாகவும் அதற்கு ஒத்துழைத்த மீடியாவுக்கும் அவர் இந்த நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து புது ஜானராக இருந்தபோதிலும் தன்னுடைய பாடல்கள் மூலம் படத்திற்கு சிறப்பான வெற்றியை சாத்தியப்படுத்திய அனிருத்துக்கும் டிஜே ஞானவேல் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X