ரஜினியின் வேட்டையன் ட்ரெயிலருக்கு தேதி குறிச்சாச்சு.. எப்படி இருக்கப் போகுதோ.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கான அஸ்திவாரத்துடன்தான் வெளியாகும். அந்த வகையில் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார். அமிதாப்பச்சன் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் படமும் வேட்டையன் தான். மேலும் படத்தில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா, பகத் பாசில் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

rajinikanth vettaiyan movie tamil cinema

நடிகர் ரஜினிகாந்த் -டிஜே ஞானவேல் காம்பினேஷனில் உருவாகியுள்ளது வேட்டையன் படம். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா, பகத் பாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்கள் மிகச்சிறப்பாக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் இசை வெளியீடும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் படம்: இசை வெளியீட்டில் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சை கேட்க ஏராளமான ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர்களை மிகவும் சிறப்பாக உற்சாகப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் குட்டிக் கதையுடன் தன்னுடைய பேச்சை பகிர்ந்திருந்தார். படத்தின் ஒவ்வொரு நடிகரையும் அவர்களது செயல்பாடுகளையும் குறிப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது படக்குழுவினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது. மூத்த நடிகரான ரஜினிகாந்த் தங்களை பாராட்டி பேசியது குறித்து அவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியின் எளிமை மற்றும் டெடிகேஷன் குறித்து பேசி வருகின்றனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்: இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே, இசை வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய மாஸ் ஹிட்டை கொடுத்துள்ளது. குறிப்பாக படத்தின் முதல் சிங்கிள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் கோடிக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது. அடுத்ததாக வெளியான ஹண்டர் வண்டார் பாடலும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இந்தப் பாடல்களுக்கு ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இசை வெளியீட்டின்போதே இந்தப் படத்தின் டீசரும் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.

ட்ரெயிலர் ரிலீஸ் அப்டேட்: அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் வெயிட்டிங்கில் இருக்கும் நிலையில் தற்போது ட்ரெயிலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வரும் அக்டோபர் 2ம் தேதி படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாவது சரியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், இந்த மொழிகளில் அக்டோபர் 2ம் தேதி ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X