Rajinikanth: நாளை வெளியாகும் ரஜினிகாந்தின் வேட்டையன் பட அறிவிப்பு.. அதுவாக இருக்குமோ?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ரித்திகா சிங், பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள வேட்டையன் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில், படத்தயாரிப்பு நிறுவனமான லைகா, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படம் குறித்த முக்கியமான அறிவிப்பு நாளை காலை 10 மணியளவில் வெளியாக உள்ளதாக லைகா அறிவித்துள்ளது. இது படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 10 தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், நாளைய தினம் அதை படக்குழுவினர் உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் முன்னணி இளம் இயக்குனர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஜெயிலர் படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மாஸ் ஹிட் கொடுத்தது. இதையடுத்து தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பிலேயே வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
வேட்டையன் படம்: வேட்டையன் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் லைகா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணியளவில் வேட்டையன் படத்தின் புதிய அப்டேட் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இது படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
ரஜினி -அமிதாப் கூட்டணி: படத்தில் ரஜினிகாந்த்துடன் பல ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். மேலும் படத்தில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்த படத்தின் சூட்டிங்கிற்காக சென்னை, மும்பை, ஹைதராபாத் என நடிகர் ரஜினிகாந்த் பறந்து பறந்து நடித்த நிலையில் ஜெயிலர் படம் போலவே இந்தப் படமும் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, நாளைய தினம் லைகா எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடும் என்று ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











