Latha Rajinikanth: லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன்ஜாமீன்.. முக்காடு போட்டுவந்த சூப்பர்ஸ்டார் மனைவி
பெங்களூர்: நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தை தயாரிப்பதற்காக அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்து போட்டதாக லதா ரஜினிகாந்த் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், லதா ரஜினிகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக கோச்சடையான் திரைப்படத்தை எடுப்பதற்காக மீடியா ஒன் நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் ஆட் பீரோ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்திடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்தக் கடனை திருப்பி செலுத்தாமல் மீடியா ஒன் நிறுவனத்தின் முரளி இழுத்தடித்து வந்ததால் அபிர்சந்த் அளித்த புகாரின்பேரில் இந்த வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ரஜினிகாந்தின் கோச்சடையான் படம்: நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் கடந்த 2014ம் ஆண்டில் அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியானது. படத்தை மீடியா ஒன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் முரளி தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் தயாரிப்பிற்காக அவர் ஆட் பீரோ நிறுவனத்தின் சார்பில் அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டுள்ளார். இதில் அந்தப் படத்தை முரளி செட்டில் செய்யாத நிலையில், லதா ரஜினிகாந்த் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.
லதா ரஜினிகாந்த் மீது மோசடி புகார்: கோச்சடையான் படம் எதிர்பார்த்த அளவில் லாபத்தை கொடுக்காத நிலையில், முரளியால், அந்த 6.2 கோடி ரூபாய் கடனை செட்டில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியதை தொடர்ந்தே, லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்து போட்டுள்ளார். ஆனால் படம் நஷ்டத்தை சந்தித்ததால் முரளி அந்தப் படத்தை செட்டில் செய்யாத நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் லதா ரஜினிகாந்த் மீது 4 பிரிவுகளில் மோசடி புகார் கொடுக்கப்பட்டு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது.
நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்: 4 பிரிவுகளில் லதா ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கர்நாடக நீதிமன்றத்தில் மேற்கொண்ட மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து 3 வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மீதமுள்ள ஒரு வழக்கின் விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்த வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையில் லதா ரஜினிகாந்த் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று முன்னதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்றைய தினம் லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முக்காடிட்டு நீதிமன்றம் வந்த லதா ரஜினி: அவர் நீதிமன்றத்திற்கு தலையில் முக்காடு போட்டபடி ஆஜராக சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்திடம் இல்லாத பணமா, அவர்களுக்கு இதெல்லாம் தேவையா என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் நடிகர் ரஜினிகாந்த் எந்தவிதமான கருத்தையும் வெளிப்படுத்தாமல் உள்ளதும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதனிடையே தனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்றும் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும் லதா ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











