ரஜினி உடல்நலம் சிறப்பாக இருக்கு.. தியேட்டரில் வேட்டையன் படம் பார்க்க வந்த லதா ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படம் சிறப்பு காட்சியுடன் தமிழகத்திலும் வெளியான நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதனிடையே, இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை அவரது குடும்பத்தினர் அனைவரும் கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் ஒட்டுமொத்தமாக சென்று பார்த்தனர்.

நடிகர் ரஜினிகாந்த்: என்ன நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சி தமிழகத்திலும் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் அதிகாலை முதலே இந்த படத்தின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். படத்திற்கு நல்ல ரிவியூக்கள் கிடைத்து வரும் நிலையில் படம் கண்டிப்பாக சிறப்பான வசூலை பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினிகாந்தின் சூப்பர் பர்ஃபார்மன்ஸ் விமர்சகர்களையும் ரசிகர்களையும் கொண்டாட செய்து வருகிறது.
வேட்டையன் படம்: படத்தில் அனிருத்தின் இசையும் அதிகமான பங்காற்றி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக ஜெய்பீம் என்ற படத்தை கொடுத்த இயக்குனர் டிஜே ஞானவேல் இந்த படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஜெயிலர் என்ற அதிரிபுதிரி வசூல் படத்தை கொடுத்த நடிகர் ரஜினிகாந்துக்கு வேட்டையன் படமும் அதே போன்றதொரு படமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் ரஜினிகாந்த், சில வார காலங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
திரையரங்கில் படம்பார்த்த ரஜினி குடும்பத்தினர்: ஆனால் வரும் 15ம் தேதி முதல் அவர் கூலி படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் இணையவுள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் வேட்டையின் படத்தை ரஜினியின் குடும்பத்தினர் அனைவரும் கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் கண்டு களித்துள்ளனர். லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வேட்டையன் படத்தை திரையரங்கில் பார்க்க வந்திருந்தனர்.
ரஜினி உடல்நலம் சிறப்பாக உள்ளது: அதேபோல படத்தில் நடித்துள்ள அபிராமி உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் படத்தை பார்த்துள்ளனர். இதனிடையே இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது பெற்றோரும் இதே திரையரங்கில் படம் பார்க்க வந்தனர். முன்னதாக தனுஷும் இதே திரையரங்கில் படம் பார்க்க வந்திருந்தார். இதனிடையே முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினியின் உடல்நலம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை அவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











