Rajinikanth: போன முறை மிஸ் ஆயிடுச்சு.. பிரம்மாண்டத்திற்கு தயாராகும் ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடித்து வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெயிலர் வெளியீடு குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ஜெயிலர். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படம், கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜெயிலர் படம் ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள நிலையில், படத்தில் ஜெயிலராக ரஜினி நடித்துள்ளார். ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்நிலையில் இன்றைய தினம் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளது.
காவாலா என்ற முதல் சிங்கிளில் ரஜினி மற்றும் தமன்னா இணைந்து ஆட்டம் போட்டிருந்தனர். குறிப்பாக தமன்னாவின் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதிகமான வியூசையும் பெற்றுள்ளது இந்தப் பாடல். அதிகமான பிரபலங்கள், ரசிகர்கள் என இந்தப் பாடலின் ரீல்சை அதிகமானோர் வெளியிட்டு வருகின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிளும் இதேபோன்ற வரவேற்பை ரசிகர்களிடையே பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெயிலர் வெளியீடு இந்தமாத இறுதியில் குறிப்பாக ஜூலை 28ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாத்த படத்திற்கு இசை வெளியீடு நடத்தப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் வகையில், ஜெயிலர் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்தவும் தயாரிப்புத்தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக அனிருத் -ரஜினி காம்பினேஷனில் வெளியான பேட்ட மற்றும் தர்பார் படங்களின் மேஜிக்கை இந்தப் படமும் ஏற்படுத்தி வருகிறது. இரண்டாவது பாடலும் அந்தவகையில் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











