RajiniKanth: ஸ்டைலு ஸ்டைலுதான்.. ஜெயிலர் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜெயிலர்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிகமான வியூஸ்களையும் பெற்றுள்ளது.

Actor Rajinis Jailer movie BTS released

நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷணன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜெயிலர். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமன்னா, ரஜினியின் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், நெய்வேலி, கொச்சி உள்ளிட்ட பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ஜெயிலர் வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக அண்ணாத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ஜெயிலராக நடித்துள்ளார். ஒரே நாளில் நடைபெறும் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் வெளியாகியுள்ள காவாலா என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை ஷில்பா ராவ் பாடியுள்ளார். 100க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்களுடன் தமன்னா இந்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாத இறுதியில் 29ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களில் ஸ்டைலான ரஜினியை பார்க்க முடிந்தது. மேலும் அவர் படத்தின் இயக்குநர் நெல்சன் உள்ளிட்டவர்களுடன் பேசியபடியும் காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்களை ரஜினி ரசிகர்கள் அதிகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்கள் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் அவருக்கு பெற்றுத் தந்தன. ஆனால் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் படம், அவருக்கு சொதப்பியது. முன்னதாகவே அவர் ஜெயிலர் படத்தில் கமிட்டாகியிருந்த நிலையில், பீஸ்ட் படம் சொதப்பியதால் இந்தக் கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அறிவித்தபடி நெல்சன் இயக்கத்திலேயே படம் உருவாகி தற்போது ரிலீசுக்கும் தயாராகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X