தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்!

சென்னை : நடிகர் ராஜ்கமல் தனது மகளுடன் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

Recommended Video

CELEBRITY BYTES ON CORONA | ACTOR RAJ KAMAL AND HIS DAUGHTER | FILMIBEAT TAMIL

ராஜ்கமல் கடந்த சில மாதங்களாக டிக்டாக் செயலியில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் பெரிய அளவில் வைரலாகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தன் மகளுடன் இனணந்திருக்கிறார் ராஜ்கமல்.

Actor rajkamal and his daughter

நடிகர் ராஜ்கமல் மற்றும் அவருடைய மகள் ராகவும் மிகவும் காமெடியாகவும் யதார்த்தமாகவும் விழிப்புணர்வை மக்களுக்கு ஒரு நிமிட வீடியோக்களாக அளித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு ஏன் என்பது முதல் ஊரடங்கில் இருக்கும் போது நாம் எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் தற்போது கொரோனா தொற்று பெரிய அளவில் பரவி வரும் நிலையில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் தங்களின் காணொளிகளின் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Actor rajkamal and his daughter

ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இன்று வரையிலும் சிறப்பான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான விழிப்புணர்வை வீடியோக்கள் வாயிலாக கூறி வருகின்றனர். முதல் நாளில் முக கவசம் அணிவது, இரண்டாம் நாளில் வீட்டில் இருப்பதைப் பற்றியும், மூன்றாவது நாளில் அப்பாக்கள் யாரும் தப்ப முடியாது என்பதை பற்றியும், நான்காம் நாளில் தூய்மை என்பது தெய்வபக்திக்கு அடுத்தது என்பதை உணர்த்தும் விதமாகவும், ஐந்தாம் நாளில் குடும்பத்தினர் அனைவரும் ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் தனிமை காக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளனர். ஆறாம் நாளில் ஆண்களா பெண்களா என்றும், ஏழாவது நாளில் வெளிநாட்டுக்கு போய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறியுள்ளனர். எட்டாவது நாளான இன்று பாசிட்டிவ் என்றால் என்ன என்பதை பற்றியும் ராஜ்கமலும் அவரது மகள் ராகவும் சிறப்பாக விழிப்புணர்வை வீடியோக்களாக பகிர்ந்து வருகின்றனர்.

Actor rajkamal and his daughter

இன்று வரை எட்டு நாட்களுக்கு எட்டு வீடியோக்கள் செய்து அந்த எட்டு வீடியோக்களும் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் பாராட்டுக்கள் பெற்று சன் நியூஸில் வரும் அளவிற்கு அது பிரபலமாகியுள்ளது. மக்கள் அனைவரும் அவர்களது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள செயலிகளில் இதை வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர். இந்த 144 ஊரடங்கு முடியும்வரை இந்த வீடியோக்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor rajkamal and his daughter

இன்னும் எத்தனை வீடியோக்கள் செய்து தரப்போகின்றனர் என்ற ஆவலை இந்த நட்சத்திர அப்பா மகள் உருவாக்கியுள்ளனர். இவர்களது சமூக உணர்வையும் பொறுப்பையும் இந்த சமுதாயமே பாராட்டி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X