நான் சம்பளம் அதிகம் கேட்பேன் என்று யாரு யா சொன்னது ?

சென்னை : ராஜ்கமல் - நமக்கு ஒரு டிவி தொகுப்பாளராக மற்றும் ஒரு சில சீரியலில் நடித்த ஒரு சீரியல் நடிகராக தெரியும்... ஆனால் அவர் சீரியல்களை விட்டுவிட்டு திரைப்படங்கள் நடிப்பதற்காக கடந்த நான்கு வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்.. இந்த முயற்சிகளில் ஒரு பங்காக சண்டிக் குதிரை எனும் திரைப்படத்திலும் மேல்நாட்டு மருமகன் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அது ஏற்கனவே திரைக்கு வந்தது அனைவருக்கும் தெரிந்ததே...

இந்நிலையில் அவர் அடுத்த கட்டமாக இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்..
Pv 999 எனும் ஒரு படமும் ஸ்கூல் கேம்பஸ் எனும் இன்னொரு படமும் திரைக்கு வர தயாராக உள்ளது..

Actor rajkamal takes new efforts for 2020

கதாநாயகனாக அவரது பயணம் தொடர்ந்தாலும் அவரது மனதில் இருக்கும் ஒரே ஆசை தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக வரவேண்டும் என்பதே...
இதற்காக அவர் கடுமையாக முயற்சித்து வருகிறார்..

Actor rajkamal takes new efforts for 2020

அவர் முயற்சியின் ஒரு பலனாக டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார்.. இப்பொழுது நடிகர் வெங்கட்பிரபு அவர்கள் தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் அவர்களின் இயக்கத்தில் கசடதபற எனும் படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்..

Actor rajkamal takes new efforts for 2020

இந்தப் பதிப்பின் மூலமாக அவர் திரையுலகினர் அனைவரிடமும் கேட்க இருப்பது தான் எந்தவித கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக உள்ளார் என்பதே.. திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தால் எனது சம்பளம் அதிகமாக இருக்கும் என பலரும் அவரவரே முடிவு செய்து கொள்கிறார்கள் நான் சம்பளத்துக்காக நடிக்க வரவில்லை நல்ல கதாபாத்திரங்கள் செய்து திரை உலகில் எனக்கென்று தனியாக ஒரு இடம் பிடிப்பதே எனது லட்சியம் என ராஜ்கமல் கூறி வருகிறார்.

Actor rajkamal takes new efforts for 2020

ராஜ்கமல் நடிக்கும் கதாபாத்திரங்கள் யதார்த்தமாகவும் , மிக எளிமையாகவும் இருக்கும். அனைவருக்கும் தெரிந்த பக்கத்துக்கு வீட்டு பையன் போல் இருப்பதினால் கதாபாத்திரங்களோடு மிக எழிதில் ஒட்டி கொள்கிறார். ராஜ்கமல் 2020 ஆண்டிற்கான பல புதிய திட்டங்களையும் பல விதமான புதிய முயற்ச்சிகளையும் செய்து வருகிறார். எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X