twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜ்கிரணுடன் ஜோடி போடப்போகும் நடிகை!

    |

    சென்னை: 28 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் நடிகை மீனா.

    நடிகை மீனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமான மீனா, 1990களில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

    ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், அர்ஜூன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்திருந்தார்.

    இங்கே தான் டிவிஸ்ட்டே இருக்கு.. ஷெரின் இருப்பது தெரியாமல் பேசிய லாஸ்லியா.. என்னல்லாம் நடக்கப்போகுதோ? இங்கே தான் டிவிஸ்ட்டே இருக்கு.. ஷெரின் இருப்பது தெரியாமல் பேசிய லாஸ்லியா.. என்னல்லாம் நடக்கப்போகுதோ?

    வசூலை குவித்தது

    வசூலை குவித்தது

    இந்த படம் பெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது. இந்தப்படத்தில் இளையராஜா இசையில் உருவாக்கப்பட்ட அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டானது.

    குணச்சித்திர வேடம்

    குணச்சித்திர வேடம்

    இதைத்தொடர்ந்து ராஜ்கிரணுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து கதாநாயகனாகவும், தவமாய் தவமிருந்து, சண்டக்கோழி, காவலன், கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார்.

    ஷைலாக்

    ஷைலாக்

    கடைசியாக அவர் நடிப்பில் சண்டக்கோழி-2 படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் ‘ஷைலாக்' என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிக்க உள்ளார்.

    ராஜ்கிரண் மீனா கூட்டணி

    ராஜ்கிரண் மீனா கூட்டணி

    இந்த படத்தில் நடிகை மீனா ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். என் ராசாவின் மனசிலே படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்த படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

    English summary
    Actor Rajkiran and actress Meena paring in Mammootty movie after 28years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X