தினமும் அடி.. சின்னத்திரை நடிகர் செய்த கொடூர சித்ரவதை.. ராஜ்கிரண் மகள் கண்ணீர் பேட்டி!
சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, பெற்றோரின் எதிர்ப்பை மீறி சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜா திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான ஒரு வருடத்திலேயே அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சின்னத்திரை நடிகரான முனிஷ் ராஜாவுடன் 2019ம் ஆண்டு பேஸ் புக் மூலம் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து, இருவரும் ஓராண்டுக்கும் மேலான பழகி உள்ளனர். இதைத்தொடர்ந்து முனிஷ் ராஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இந்த விஷயத்தை பிரியா, தந்தை ராஜ்கிரணிடம் சொல்ல அவர் மறுத்துள்ளார். அதன் பின் 2022ம் ஆண்டு வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

ராஜ்கிரண் அறிக்கை: இதைத்தொடர்ந்து, நடிகர் ராஜ்கிரண் தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும், பிரியா தன்னுடைய வளர்ப்பு மகள்தான் என்றும், தன்னை அசிங்கப்படுத்தவே இந்தத் திருமணம் செய்து கொண்டார் எனவும், இனிமேல் தன் பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது எனவும் கடுமையாக எச்சரித்திருந்தார்.
பிரிந்துவிட்டோம்: அதன் பின் சில மாதங்கள் கழித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த பிரியா, நானும் முனுஷ் ராஜாவும் பிரிந்து விட்டோம். அது சட்டபூர்வமான திருமணம் இல்லை. இந்த திருமணத்தால் நான் எனது அப்பாவை காயப்படுத்தி விட்டேன். இதற்காக அவரிடம் நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் போதாது என்று கதறி அழுது பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
ஏற்கனவே திருமணம்: இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்துள்ள பிரியா, தனது கணவரை பிரிந்ததற்காக காரணத்தை கூறியுள்ளார். அதில், முனிஷ் ராஜா காதலிக்கும் போது உருகி உருகி பேசினார். ஆனால், திருமணத்திற்கு பிறகு மாறிவிட்டார். அதுமட்டுமில்லாமல், என் திருமணத்தை பதிவு செய்யவில்லை, அதுபற்றி கேட்ட போதுதான் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனவிஷயம் தெரிந்தது. அதன்பின், அப்பாவிடம் பேசி பணம் வாங்கி வா என என்னை மிரட்டினார். நான் வீட்டை எதிர்த்து திருமணம் செய்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.
தினமும் அடி உதை: அவரது அம்மா, பணம் வாங்கிவர சொல்லி கெட்ட கெட்ட வார்த்தையால் தினமும் திட்டுவார்கள், கேள்வி கேட்டால் என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால், நான் மனதளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். அதை தெரிந்து கொண்ட என் அம்மா எனக்கு பண உதவி செய்தார். அந்த பணமும் பத்தவில்லை என்று தினமும் என்னை டார்ச்சர் செய்வார். இனி மேல் வாழவே முடியாத என்ற நிலைமை வந்த போது தான் நான் அப்பாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, அவரை விட்டு பிரிந்து வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











