20 வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகர் சூர்யாவுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகர் ஒருவர் இணைந்து நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா, பின்னர் வீட்டில் தனிமையில் இருந்தார். அண்மையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ்வானதாக தகவல் வெளியானது.

40வது படத்தில்

40வது படத்தில்

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் 40வது படம் குறித்த தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகர் சூர்யா தற்போது தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடிக்கிறார். இதில் சத்யராஜ், சரண்யா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இணைந்த ராஜ்கிரண்

இணைந்த ராஜ்கிரண்

இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் படத்தை வரும் ஆயுத பூஜை நாளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் நடிகர் ராஜ்கிரண் இணைந்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ராஜ் கிரண் சூர்யாவுடன் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் இணைந்து நடித்தார். அதன்பிறகு 20 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X