உன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது... ராஜ்கிரணின் மனதை உருக்கும் கவிதை !
சென்னை : விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ராஜ் கிரண் உருக்கமான கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
Recommended Video
அந்த கவிதை தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எக்மோ சிகிச்சை
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறுதிச்சடங்கு
மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் தகன மயானத்துக்கு விவேக்கின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விவேக் மறைவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு அவரது இளையமகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார்.

உருக்கமான கவிதை
நடிகர் விவேக் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ராஜ்கிரண் விவேக் மறைவு குறித்து இரங்கல் கவிதை எழுதியுள்ளார்.

அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்த
போதெல்லாம்,
அன்பைத்தேடிப்போனாய்
அறிவைத்தேடிப்போனாய்
பண்பைத்தேடிப்போனாய்
எல்லாவற்றையும் என்னால்
புரிந்து கொள்ள முடிந்தது,
மகிழ்ச்சியாய் இருந்தது...
இப்பொழுது,
தாயைத்தேடிப்போனாயோ
தனயனைத்தேடிப்போனாயோ
யாரை நம்பிப்போனாயோ
எதையுமே என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை,
மனம் தவிக்கிறது...
என்ன நினைத்து என் மனதை தேற்றிக்கொள்ள முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது...
நடிகர் ராஜ்கிரணின் இந்தக் கவிதை ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது .


Click it and Unblock the Notifications











