மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் ராஜ்கிரண்... யார் டைரக்ஷன்ல தெரியுமா?
சென்னை : முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜ்கிரண், ஆண்டவர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
லிப்ரா புரொடக்ஷன் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்கிரண்
தொடை அழகுக்கு புகழ் பெற்றவர் ரம்பா. அவருடைய வசீகரமான தொடை அழகில் பல ரசிகர்கள் மயங்கி இருந்தார். அதே போல தொடைஅழகுக்கு புகழ் பெற்றவர் தான் ராஜ்கிரண். தனது கட்டுமஸ்தான தொடையை காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஜ்கிரண். அவருடைய சினிமா வாழ்க்கையையே திருப்பிப் போட்ட படம் என்றால் அது என் ராசாவின் மனசிலே. 20 வருடங்களுக்கு முன்பு வெளியான இப்படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

தொடை தெரிய வேஷ்டி
கஸ்தூரிராஜா இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இப்படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமே நடிகர் ராஜ்கிரணின் தொடை தெரிய வேஷ்டி கட்டுவது, எலும்பு கடிப்பது மற்றும் மீன் சாப்பிடுவது போன்ற காட்சிகளால்தான். இந்தப் படத்தில்தான் மீனா, வடிவேலு ஆகியோர் நடிகர்களாக அறிமுகமானார்கள். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

கதாநாயகன்
அன்றிலிருந்து இன்று வரை ராஜ்கிரணுக்கு திரை வட்டாரத்தில் தனி மரியாதை உண்டு. தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் மிரட்டலாக நடித்து வரும் ராஜ்கிரண், இயக்குனர் கருபழனியப்பன் இயக்கும் ஆண்டவர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டவர்
பிரபல இயக்குனரான கரு பழனியப்பன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு ஆண்டவர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர், நடிகை பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











