Don't Miss!
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்..' மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!
சென்னை: எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல் என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில் கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படம் ஹீரோவாக அறிமுகமானவர் ராஜ்கிரண்.
1991 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அவர் ஜோடியாக, மீனா நடித்திருந்தார். ரவிச்சந்தர், சாரதா பிரீதா, கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் நடித்திருந்தனர்.
'கவலைப்படாதே, கடவுள் மன்னிப்பார்' அப்ப இருந்துதான் பெண்ணியவாதியா மாறினேன்..பிரபல நடிகை பிளாஷ்பேக்!
அரண்மனைக் கிளி
சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படத்தில்தான், வடிவேலு நடிகராக அறிமுகமானார். இளையராஜ இசை அமைத்திருந்த இந்தப் படத்தை ராஜ்கிரண், தனது ரெட் சன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்திருந்தார். இதன் பாடல்கள் செம ஹிட். அடுத்து அரண்மனைக் கிளி என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கி நடித்தார்.
முக்கிய வேடங்கள்
இந்தப் படத்தில் அஹானா, காயத்ரி, சங்கிலி முருகன் உட்பட பலர் நடித்திருந்தன. இந்தப் படமும் ஹிட்டானது. இதையடுத்து எல்லாமே என் ராசாதான் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். சங்கீதா, ரூபாஶ்ரீ நடித்த இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றது. 90-களில் ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கியவராக இருந்த ராஜ்கிரண், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.
பிறந்த நாள்
கார்த்தியின் கொம்பன், தனுஷின் பா பாண்டி, விஷாலின் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்துள்ள ராஜ்கிரண், அடுத்து குபேரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் மம்மூட்டி, மீனா, சித்திக், ஜான் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையே, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவுகளை எழுதி வரும் நடிகர் ராஜ்கிரண், இப்போது தனது மனைவி பத்மஜோதியின் பிறந்த நாள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஓருயிராகிய நாங்கள்
அதில் அவர், எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்...இறை அருளால், என் காதல் மனைவிக்கு பிறந்த நாளான இன்று, இறைவனிடம், இரு கரங்கள் ஏந்தி அழுது, மன்றாடி, என் மனைவி எல்லா மேன்மைகளையும் பெற்று, வாழ்வாங்கு வாழ பிரார்த்தித்து, என்னில் பாதியாகி, என்னுள்ளே தானுமாகிய என்னவளை வாழ்த்துகிறேன்... வாழ்க வாழ்க. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் வேண்டி, ஈருடல் ஓருயிராகிய நாங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.