குடிச்சிட்டு அடிப்பாரு..அப்பா அவ்ளோ சொல்லியும் நான் கேக்கல.. ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, தனது கணவர் முனீஸ் ராஜா தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தியதாகவும், அவ்வப்போது பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் யூடியூப் சேனல் ஒன்றில் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ் ராஜா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார்.

Actor Rajkirans daughter Zeenat Priya Emostional interview

இந்த நேரத்தில், நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை ராஜ்கிரண் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், சின்னத்திரை நடிகர் என்னுடைய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். எனவே என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி இருந்தார்.

கண்ணீர் பேட்டி: இதையடுத்து, வளர்ப்பு மகள் பிரியா, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நான் 2022ம் ஆண்டு முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். அந்த கல்யாணத்திற்கு பிறகு, நாங்கள் தற்போது தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில மாதங்கள் ஆகி விட்டன. எங்கள் கல்யாணம் சட்டப்பூர்வமான கல்யாணம் கிடையாது. இந்த கல்யாணத்திற்கு பிறகு, என்னுடைய வளர்ப்பு அப்பாவை நான் மிகவும் காயப்படுத்தி விட்டேன். முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்ட பின், எனக்கு சில பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அந்த நேரங்களில் கூட என்னுடைய வளர்ப்பு அப்பா என்னை கைவிடவில்லை. இது நான் எதிர்பார்க்காத கருணை. நான் எத்தனை முறை மன்னிப்புக்கேட்டாலும் பத்தாது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அப்பா என கதறி அழுது இருந்தார்.

ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பேட்டி: ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பிரியா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த திருமணத்திற்காக நான் என் அம்மா, அப்பா என அனைவரையும் பகைத்துக்கொண்டேன். இந்த மாதிரி சூழ்நிலையில் எந்த பெண்ணும், கிடைத்த வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பாள். அதே கனவோடுதான் நான் என் திருமண வாழ்க்கையை தொடங்கினேன். ஆனால், நினைத்ததற்கு எதிராக அனைத்தும் இருந்தது. இருந்தாலும், அனைத்தையும் சரி செய்து விடலாம் என்று நினைத்தேன். ஒரு கட்டத்திற்கு மேல், இனி எதுவும் மாறாது என்பதை நன்றாக தெரிந்து கொண்டுதான் வெளியில் வந்தேன்.

தினமும் அடிப்பாரு: திருமணமான முதல் மாதத்தில் இருந்தே எனக்கும் அவருக்கும் பிரச்சனை ஆரம்பித்து விட்டது. முனிஸ் ராஜா, பயங்கரமா குடிப்பாரு, குடித்துவிட்டு அடிப்பார், கண்டபடி பேசுவார். காலையில் விடிந்ததும் எதுவுமே அவருக்கு நினைவு இருக்காது இயல்பா இருப்பாரு. இந்த குடிப்பழக்கத்தை மாற்ற முடியும் என்று நம்பினேன். ஆனால், முடியவில்லை. இதுமட்டுமில்லாமல் பணம் கேட்டு எனக்கு தொல்லை கொடுத்தார். அந்த நேரத்தில் எனக்கு யாரிடம் சென்று பணம் கேட்பது என்று தெரியவில்லை. இருந்தாலும் என் கணவருக்காக எனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் பணம் வாங்கி கொடுத்தேன் இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது அதை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.

அப்பா சொல்லி நான் கேட்கல: இவரை விட்டு நான் போகவேண்டும் என்று பல முறை முயற்சி செய்தேன். ஆனால், அப்போது அவர், நீ வீட்டைவிட்டு போனா உன் குடும்பத்தையே வெட்டுவேன் என்று பல முறை மிரட்டி இருக்கிறார். இது எல்லா பிரச்சனையும் சேர்ந்து நான் மிகுந்த மனஅழுத்தத்திற்கு சென்றதால், மருத்துவமனைக்கு சென்று மருந்து எடுத்துக்கொண்டேன். என் அப்பா அவ்ளோ சொல்லியும் நான் கேக்கல என்று அந்த பேட்டியில் அவர் கதறி அழுதார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X