நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படும் நடிகர் ரஜினிகாந்த்.. உடல் நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் அப்டேட்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வரும் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதற்காக கூலி படத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்திருந்தார்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி அவர் சென்னையின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நலம் தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது.

rajinikanth vettaiyan movie coolie movie


நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி சென்னையின் பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அப்டேட் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதனிடையே அவர் வழக்கமான ஹெல்த் செக்கப்பிற்காக மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அப்டேட் தெரிவித்திருந்தார்.

மருத்துவமனையில் ரஜினிகாந்த்: இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர், நாளைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் சரியாவதற்கு சக நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்திருந்தனர். நடிகர் விஜய், சத்யராஜ், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக ரஜினிகாந்தின் உடல்நலம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டிருந்தனர்.

நாளை டிஸ்சார்ஜ்: இந்நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை சீராகி அவர் நாளைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அவர் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், அந்த படத்தில் தொடர்ந்து இணைவாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. கூலி படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நிறைவு செய்துவிட்டு அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.

தள்ளிப்போகும் கூலி பட சூட்டிங்?: இந்நிலையில் ரஜினிகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து கூலி படத்தின் சூட்டிங் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பங்கேற்ற ரஜினிகாந்த், கூலி படத்தின் ஷூட்டிங் மற்றும் வேட்டையன் இசை வெளியீடு உள்ளிட்டவற்றிற்காக விசாகப்பட்டினத்திற்கும் சென்னைக்கும் மாறி மாறி சென்று வந்ததால் தான் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் பிரார்த்தனை: 70 வயதை கடந்த நிலையிலும் ரஜினிகாந்தின் சுறுசுறுப்பு மற்றும் எனர்ஜி குறித்து பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் சூழலில் அவரது உடல் நல குறைவு அதற்கெல்லாம் திருஷ்டியாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் உடல்நலம் சரியாவதற்காக அவர்கள் அங்கபிரதட்சணம் உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டதை பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X