“சிட்டிசன்“ கெட்டப்பிற்கு டஃப் கொடுக்கும் ராம்சரண்… ஷங்கரின் RC15 பட அப்டேட்ஸ் !

சென்னை : இந்தியன் 2 படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து RC15 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பலவிதமான கெட்டப்பில் ராம்சரண் மிரட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். அரவிந்த் சாமி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர்.

தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ராம்சரண்

ராம்சரண்

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர்களின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. காரணம், அவர்கள் நடிக்கும் படங்கள் தற்போது இந்திய அளவில் பான் இந்திய படங்களாக வெளியிடப்படுகின்றன.

பல கெட்டப்பில்

பல கெட்டப்பில்

ராம்சரணின் 15 திரைப்படமான இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தில் ராம் சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருப்பதாகவும். நடுத்தர வயது முதல் வயதானவர் வரை பல கெட்டப்புகளில் ராம்சரண் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மோகன்லாலிடம் பேச்சு

மோகன்லாலிடம் பேச்சு

RC15 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் கதை கேட்ட பிறகு அவர் நடிக்க மறுத்து விட்டாராம். படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் ஊழல் செய்து அதிகமாக சொத்து சேர்க்கும் அரசியல்வாதி கதாபாத்திரம் என்பதால் மோகன்லால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

இதையடுத்து, மாநாடு படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த எஸ்.ஜே சூர்யாவிடம் வில்லன் கதாபாத்திரம் குறித்து பேசியிருப்பதாகவும் அதற்கு அவர் ஓகே சொன்னதாகவும் கோலிவுட் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில் 60% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் எஞ்சிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X