231 கி.மீ 4 நாட்களாக நடந்தே வந்த ரசிகர்கள்…. ஆரத்தழுவி நெகிழ்ந்த ராம் சரண் !
ஆந்திரா : தெலுங்கு மெகா ஸ்டார் ராம் சரணை சந்திக்க அவரது தீவிர ரசிகர்கள் 231 கி.மீ மீட்டர் நடந்தே வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
கொரோனாவின் ஊரடங்கால் ஆந்திராவில் குறைவான பேருந்து போக்குவரத்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ராம் சரணை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் அவரது தீவிர ரசிகர்கள் 4 நாட்களாக நடந்தே வந்துள்ளனர்.
இதனால், ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்த ராம் சரண் அவர்களை ஆரத் தழுவி, அவர்களுடன் கலந்துரையாடினார்.

மகதீரா
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்ஜிவியின் மகனாக ராம் சரண். சிறுத்தை என்ற தெலுங்கு திரைப்படத்தில் தனது முதல் அறிமுகத்தை கொடுத்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த எஸ்.எஸ். ராஜ மௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். தமிழில் மாவீரன் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

231 கிமீ நடந்தே வந்து
இந்நிலையில், நடிகர் ராம் சரணின் தீவிர ரசிகர்களான சந்தியா ஜெயராஜ், ரவி மற்றும் வீரேஷ் என்பவர்கள், ஜோகுலாம்பா கட்வாலில் இருந்து 4 நாட்களாக 231 கி.மீ தூரம் நடந்தே ஹைதராபாத் வந்து ராம் சரணை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இவர்களை பார்த்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்த ராம் சரண் அவர்களை ஆரத் தழுவி நன்றி கூறினார். மேலும், என் மீது நீங்கள் வைத்துள்ள அளவு கடந்த அன்புக்கு நன்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அல்லூரி சீதாராம ராஜு
ராம் சரண் வரலாற்று சிறப்புத் திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்தில், நடித்து வருகிறார். ஆர்.ஆர்.ஆர் இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் கற்பனைக் கதையை விவரிக்கிறார். அல்லூரி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கோமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஆலியா பட் சீதாவாக நடிப்பார்.

ஆகஸ்ட்டு மாதத்திற்குள் படத்தை முடிக்க
இதில் அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலிசன் டூடி, ஸ்ரியா சரண் மற்றும் ரே ஸ்டீவன்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆர்.ஆர்.ஆர் டி.வி.வி தனய்யா தயாரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தின் அனைத்துப் பணிகளையும் முடிக்க தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











