அந்த அறிகுறியே இல்லையாமே.. பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை!

By

சென்னை: பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடுமையானப் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சரிந்து வருகிறது

சரிந்து வருகிறது

இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவியது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக சரிந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடு நீட்டிப்பு

கட்டுப்பாடு நீட்டிப்பு

படிப்படியான தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் ஜனவரி 31- ஆம் தேதி வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப் பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

இந்நிலையில் இந்த கொரோனாவால் ஏராளமான சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டனர். நடிகர் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தமன்னா, ராஜமவுலி, விஷால், பிருத்விராஜ், ஜெனிலியா, நிக்கி கல்ராணி, டாக்டர் ராஜசேகர், ஜீவிதா உட்பட பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

ராம் சரண் தேஜா

ராம் சரண் தேஜா

சிகிச்சைக்குப் பின்னர் மீண்டனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோவும் நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையில் தெரியவந்ததாக, சமூக வலைதளப் பக்கத்தில் இன்று காலை உறுதி செய்துள்ளார்.

வலிமையோடு திரும்புவேன்

வலிமையோடு திரும்புவேன்

தனக்கு அறிகுறி இல்லை என்றாலும் மருத்துவர்கள் ஆலோசனைபடி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். விரைவில் நலம்பெறுவேன் என்றும் வலிமையுடன் திரும்புவேன் என்று கூறியுள்ள அவர், கடந்த சில நாட்களாக தன்னைச் சந்தித்தவர்கள் கொரோனா சோதனை செய்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆச்சார்யா ஷூட்டிங்

ஆச்சார்யா ஷூட்டிங்

சில நாட்களுக்கு முன் அவர், சீரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிரஞ்சீவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். பிறகு பரிசோதனை கருவி தவறாக காண்பித்ததால் ஏற்பட்ட சிக்கல் என்று தெரியவந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X