சொதப்பிய கேம் சேஞ்ஜர்.. தமன் சொன்ன அந்த வார்த்தை.. அன்ஃபாலோ செய்த ராம் சரண்.. இந்த கோவம் ஆகாதுப்பா!
சென்னை: பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகவும் எதிர்பாக்கப்பட்ட திரைப்படம் கேம் சேஞ்சர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தை திரையில் பார்க்க ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வந்த வேகத்திலேயே ஊத்திக் கொண்டு, படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் படம் காத்து வாங்கியது.
மிகவும் எதிர்பாக்கப்பட்ட இந்த படம் படுதோல்வியை சந்தித்தது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், பலரும் படம் சொதப்பியதற்கு முக்கிய காரணம் படத்தில் திரைக்கதை சரியாக இல்லை என காரணத்தை கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் படத்தின் பாடலில், இசை எடுபடவில்லை என பலர் குற்றம் சாட்டிய நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இசையமைப்பாளர் தமன், நடன இயக்குனர்கள் சரியாக நடனம் அமைக்கவில்லை என குற்றம்சாட்டி இருந்தார். இது ராம் சரணை கோவப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பெரும் நஷ்டத்தில் தயாரிப்பாளர்: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஸ்ரீகாந்த், சுனில், யாஷிகா ஆனந்த், வெண்ணிலா கிஷோர் என பலர் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் பெங்கல் பாண்டியை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிசில் மோசமான தோல்வி அடைந்தது. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் 120 கோடியை மட்டுமே வசூலித்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதுதான் காரணம்: இந்த படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் இயக்குநர் சங்கர் முதல்வன் படத்தின் கதையை சற்று மாற்றி எடுத்து இருக்கிறார் என்றும், படத்தில் பிரம்மாண்டத்தை தவிர ரசிக்கும் படி ஒன்றுமே இல்லை என இணையத்தில் கருத்துகளை பகிர்ந்து வந்தனர். இன்னும் சிலர், கேம் சேஞ்சர் படத்தின் பாடல்களும் ரசிக்கும் படி இல்லை என குற்றம்சாட்டினார்கள். இதற்கு ஊடகம் ஒன்றுக்கு பதில் அளித்த இசையமைப்பாளர் தமன், ஒரு படத்தின் வரும் பாடல் இசைக்கும், இசையமைப்பாளருக்கும் மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. ஒரு பாடல் ஹிட்டாவது நடன இயக்குநர்களின் கைகளிலும் இருக்கிறது. அந்தப் பாடல் திரையில் வரவேற்பை பெற வேண்டுமென்றால் நடன இயக்குநர்கள் சரியான நடன அசைவுகளை அமைக்க வேண்டும். ஆனால், கேம் சேஞ்சர் படத்தின் பாடல்களில் ரசிகர்களை கவரும் வகையில் நடன அசைவுகள் இல்லை. அது தான் படம் தோல்வி அடைய காரணம் என கூறியிருந்தார்.

இந்த கோவம் ஆகாதுப்பா: இசையமைப்பாளர் தமனின் இந்தக் கருத்து இணையத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, இப்படத்தின் நாயகன் ராம் சரணை அது சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ராம் சரண், தனது சமூக வலைத்தளத்தில் இருந்து தமனை 'அன்ஃபாலோ' செய்துள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தமன் வெளிப்படையான பதில் அவரை கோவப்பட வைத்துவிட்டது என்றும், கருத்தை சொல்லுவது அவரின் தனிப்பட்ட விருப்பம் அப்படி இருக்கும் போது, ராம்சரணுக்கு இந்த கோவம் ஆகாதுப்பா என ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











