ரியல் ஹீரோ நீங்க தான்..புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராம் சரண்!

ஹைதராபாத் : புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் ஆசையை நடிகர் ராம்சரண் நிறைவேற்றினார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தனது தந்தையைப் போலவே தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவாக இருக்கிறார்.

இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவராக இருக்கிறார்.

நடிகர் ராம்சரண்

நடிகர் ராம்சரண்

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ராம் சரண், சிருந்தா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே பிரம்மாண்ட வெற்றி பெற்று, நன்றாக கல்லாக் கட்டியது. இதையடுத்து, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் வாய்பிளந்து போனார்கள். அந்த அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்தார்.

அடுத்தடுத்து ஹிட்படங்கள்

அடுத்தடுத்து ஹிட்படங்கள்

மகதீரா திரைப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி தமிழகத்திலும் சக்கைப்போடு போட்டது. இந்த படத்தின் மூலம் ராம்சரண் தமிழ் ஆடியன்சுக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து, Racha, Naayak, Yevadu, Dhruva, Rangasthalam என வரிசையாக மாஸ் ஹிட் கொடுத்து தன்னை ஒரு வெற்றி நாயகனாக நிலை நிறுத்திக்கொண்டார்.

ஆர்ஆர்ஆர் படத்தில்

ஆர்ஆர்ஆர் படத்தில்

மீண்டும் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல ஜூனியர் என்டிஆர் பீம் ரோலில் நடத்திருந்தார். இரண்டு ஹீரோக்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்விக்கே இடம் கொடுக்காதவாறு இருவரின் கதாபாத்திரங்களும் ரேஸில் மாறி மாறி முந்தி இருந்தது. அதிக வசூலை அள்ளி இந்த படம் ராம் சரணின் புகழை உலகறியச் செய்தது.

9 வயது சிறுவனின் ஆசை

9 வயது சிறுவனின் ஆசை

இந்நிலையில், 9 வயது சிறுவன் ரவுலா மணி குஷால் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ராம் சரணின் தீவிர ரசிகரான இந்த சிறுவன்,அவரை நேரில் பார்க்க ஆசைப்பட்டுள்ளார். அவரின் விருப்பத்தை மேக்யவிஷ் பவுண்டேசன் அதிகாரிகளிடம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரியல் ஹீரோ நீங்க தான்

ரியல் ஹீரோ நீங்க தான்

இந்த தகவலை பவுண்டேஷன் அதிகாரிகள் ராம் சரணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க, நடிகர் ராம் சரண், சிறுவன் சிகிச்சை பெற்று வரும் ஹைதராபாத் ஸ்பர்ஷ் ஹாஸ்பிஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுவனை சந்தித்து அவனுடைய ஆசையை நிறைவேற்றி உள்ளார். மேலும், சிறுவனின் குடும்பத்திற்கும் நம்பிக்கை கூறி, தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும், குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து, ராம்சரணின் ரசிகர்கள், ரியல் ஹீரோ தான் சார் என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X