Game Changer movie: ராம் சரண் படத்துக்கு மிட் நைட் ஷோ பர்மிஷன்.. ஒரு டிக்கெட் விலை இவ்வளவா!
ஐதராபாத்: நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் வரும் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை ஷங்கர் இயக்கியுள்ள நிலையில் படம் மிகப்பெரிய ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக காத்திருக்கிற்து.
படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேம் சேஞ்சர் படத்தின் விமர்சனம்: ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான் என்ற வகையில் இநத்ப் படத்திலும் அதையே தொடர்ந்துள்ளார். படத்தின் பாடல் காட்சிகள் உள்ளிட்ட அனைத்திலும் பிரம்மாண்டம் அதிரடி சரவெடியாக காட்சியளிக்கிறது. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுததியுள்ள நிலையில் வரும் 10ம் தேதி பொங்கல் மற்றும் சங்கராந்தி கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளது. இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்தப் படம் ஷங்கரின் கம்பேக்காக அமைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் பார்க்க வேண்டிய படம் என்றும் இந்தப் படத்திற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மிட் நைட் காட்சிக்கு அனுமதி: இதனிடையே இந்தப் படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு மட்டுமில்லாமல் நள்ளிரவு 1 மணிக்கும் சிறப்பு காட்சிக்கு கேம் சேஞ்சர் படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல அதிக கட்டணத்திற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த மிட்நைட் ஷோவிற்கு 600 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல காலை 4 மணி காட்சிகளில் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதலாக 175 ரூபாய் கட்டணமும் மற்ற திரையரங்குகளில் கூடுதலாக 135 ரூபாய் கட்டணத்தில் வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணத்திற்கு அனுமதி: இதேபோல 11ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் இதேபோன்ற கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி மற்றும் அரசியல் ஆக்ஷன் களத்தில் கேம் சேஞ்சர் படம் உருவாகியுள்ள நிலையில், பொங்கலையொட்டி வரும் தொடர் விடுமுறையை இந்தப் படம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் ராம் சரண் நடித்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் உருவாக்கியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











