Game changer: I am unpredictable.. அதிரடியாக சொல்லும் கேம் சேஞ்சர்.. ராஜமௌலி வெளியிட்ட ட்ரெயிலர்!
விஜயவாடா: நடிகர் ராம்சரண் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர்படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.இந்தப்படத்தின் மூலம் தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஷங்கர். அவரது இந்த என்ட்ரிமூலம் மாஸ் காட்ட தயாராகியுள்ளார்.
படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் லாஞ்ச் நிகழ்ச்சி இன்றைய தினம் நடந்துள்ளது. இதில் ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினர்பங்கேற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராஜமௌலியும் இணைந்துள்ளார்.

கேம் சேஞ்சர் படம்: நடிகர் ராம்சரண் தெலுங்கின் முக்கியமான மற்றும் ரசிகர்களை கவர்ந்த நடிகராக அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டி வருகிறார். ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் அவர் கேம் சேஞ்சர் படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி இணைந்துள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், அஞ்சலி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஷங்கர் படங்களுக்கேயுரிய பிரம்மாண்டத்துடன் இந்தப் படமும் உருவாகியுள்ளது.
ட்ரெயிலர் ரிலீஸ்: முன்னதாக இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் பிரம்மாண்டத்தை அவை வெளிப்படுத்தும்வகையில் அமைந்திருந்தன. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் அடுத்தடுத்த பல பேட்டிகளையும் இந்தப் படத்திற்காக கொடுத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் நடந்துள்ளது. இதில் ராம்சரண், எஸ்ஜே சூர்யா, இயக்குநர் ஷங்கர், சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், அஞ்சலி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
ராம்சரண் & ஷங்கர் கூட்டணி: படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்தப் படத்திற்கான அதிகப்படியான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. இந்தப் படம் மூலம் ஷங்கர் டோலிவுட்டிலும் களமிறங்கியுள்ள நிலையில், படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ராம்சரண் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான அவரது போராட்டத்தை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது. ஆண்டின் துவக்கத்திலேயே பொங்கல் கொண்டாட்டமாக இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், படம் இந்த ஆண்டின் சிறப்பான ரிலீசாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மாண்டமான ட்ரெயிலர்: இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்தட்ரெயிலரை பிரபல இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டுள்ளார். தில் ராஜு, சிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் மாஸ் செய்ய காத்திருக்கும் சூழலில், ட்ரெயிலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த ட்ரெயிலரில் ஷங்கருக்கே உரிய பிரம்மாண்டம், ராம்சரணுக்கே உரிய அதிரடி ஆகியவை இணைந்துள்ளன. கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா அனைவரும் படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளனர்.
ஷங்கராந்தி ரிலீஸ்: இதனிடையே இந்தட்ரெயிலர் வெளியீட்டில் பேசிய படக்குழுவினர் அனைவரும் இந்தப் படம் சங்கராந்தி வெளியீடாக இல்லாமல் ஷங்கராந்தி வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக பேசியுள்ளனர். இதேபோல ஷங்கரும் ராமநவமி என்று ராம்சரணை பாராட்டி பேசியுள்ளார். ஆர்ஆர்ஆர் படம் ராம்சரணை சர்வதேச அளவில் கொண்டு சென்றுள்ள நிலையில், தற்போது சேம் சேஞ்சர் படமும் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











