வெளியானது கேம் சேஞ்சர் படத்தின் 2வது சிங்கிள்.. அட எஸ்ஜே சூர்யா இப்படியெல்லாம் ஆடுவாரா?

ஐதராபாத்: நடிகர் ராம்சரணின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் அவர் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் தமன். அவரது இசையில் முதல் சிங்கிளே ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்ட நிலையில் தற்போது ரா மச்சா மச்சா என்ற இந்த இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகி ரசிகர்களை வைப் செய்ய வைத்துள்ளது.

ram charan shankar game changer movie

நடிகர் ராம்சரண்: நடிகர் ராம்சரண் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். முன்னதாக ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்திருந்தது. இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து ஆட்டம் போட்டிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கேம் சேஞ்சர் படம்: இந்தப் படம் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை படக்குழுவினர் துரிதப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் ரிலீசாகி மிகப்பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளன. இன்றைய தினம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரா மச்சா மச்சா ரா வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. இதன் பிரமோ முன்னதாக வெளியாகி, மிகப்பெரிய வைபை கொடுதத நிலையில் தற்போது முழு பாடலும் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.

கேம் சேஞ்சர் 2வது சிங்கிள்: இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம், ஷங்கர், ராம்சரண் உள்ளிட்டவர்களின் மெனக்கெடல்கள் ஆகியவையும் தற்போது இந்த லிரிக் வீடியோ பாடலில் இணைக்கப்பட்டுள்ளது. நாகாஷ் ஆசிஷ் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு ஆனந்த ஸ்ரீராம் வரிகளை எழுதியுள்ளார். கணேஷ் ஆச்சார்யா இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். மேலும் படத்தில் அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் மற்றும் சுனில் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் ரா மச்சா மசசா ரா பாடலுக்கு படத்தில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா சூப்பரான ஆட்டம் போட்டுள்ளார்.

எஸ்ஜே சூர்யா ஆட்டம்: ரசிகர்களுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா போட்டுள்ள இந்த ஆட்டம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை கட்டியிழுத்துள்ளது. ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்ற வகையில் இந்தப் பாடலும் பிரம்மாண்டத்திற்கு குறைவில்லாமல் காணப்படுகிறது. இந்தப் பாடல் டைட்டில் பாடலாக அமைந்துள்ள நிலையில், தன்னுடைய சிறப்பான நடனத்தால் ராம்சரண் மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களும் படத்திற்கு மேலும் சிறப்பையும் பிரம்மாண்டத்தையும் சேர்த்துள்ளனர். படம் பான் இந்தியா ரிலீசாக உருவாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X