Actor Ram Charan: கேம் சேஞ்சர் பட சூட்டிங் ஸ்பாட் வீடியோ.. க்யூட் லுக்கில் ராம்சரண்!
விசாகப்பட்டினம்: இயக்குநர் ஷங்கர் டைரக்ஷனில் உருவாகி வருகிறது கேம் சேஞ்சர் படம். இந்தியன் 2 படத்தில் இணைந்திருந்த ஷங்கர், அந்தப் படத்தின் சூட்டிங் பாதியிலேயே நின்றதால் தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை துவங்கினார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இந்தியன் 2 பட,த்தின் பஞ்சாயத்துக்கள் நிறைவடைந்து அந்தப் படத்தையும் இயக்கத் துவங்கிய ஷங்கர், கேம் சேஞ்சர், இந்தியன் 2 மட்டுமில்லாமல் இந்தியன் 3 படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சிகளை அடுத்தடுத்து எடுத்து முடித்துள்ளார் ஷங்கர். இதையடுத்து தற்போது மீண்டும் கேம் சேஞ்சர் படத்தின் சூட்டிங்கில் அவர் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் அடுத்ததாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதில் 1000 ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தில் ராஜூ தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இவர் முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் சித்தார்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதையை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர்: இயக்குநர் ஷங்கர் இந்திய அளவில் முன்னணி இயக்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ள நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளன. சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் பாடல் சூட்டிங்கை எடுத்து முடித்துள்ளார் ஷங்கர். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலே அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரு என இருவேறு கேரக்டர்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
இந்தியன் 2 படம்: இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் சேனாபதி கேரக்டரில் கமல்ஹாசன் நடித்துள்ளார். படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்தின் சூட்டிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே துவங்கிய நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் படம் முடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் நீளம் காரணமாக படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு பாகங்களாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ராம்சரண் -ஷங்கர் கூட்டணி: இந்தப் படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ராம்சரணின் நடிப்பில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் கேம் சேஞ்சர் படத்தின் சூட்டிங்கை தற்போது எடுத்து வருகிறார் ஷங்கர். இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டு வருகிறது. இதில் 1000 ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தில் ராஜூ தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இவர் முதல்முதலில் ணங்கரின் பாய்ஸ் படத்தில்தான் அறிமுகமானார். இதனால் இவர்களது கூட்டணி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
விறுவிறு சூட்டிங்: இந்தப் படத்தின் கதையை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். அவருடன் ஷங்கர் முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத்தில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் தில் ராஜூ கூறியிருந்தார். ஆனால் படத்தின் சூட்டிங் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அதில் ஷேவிங் செய்த லுக்கில் அரசு அதிகாரி போல ராம்சரண் காட்சியளிக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











