’புஷ்பா’ பட வாடை அடிக்கிறதே? ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ முதல் பாடல் வெளியானது!
சென்னை: கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு நடிகர் ராம் சரண், 'பெட்டி' படத்தில் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சிவராஜ்குமார், ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் 26ந் தேதி, இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் பாடல் 'சிகிரி இன்று வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'சிகிரி' என்ற தலைப்பிலான இந்தப் பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
'உப்பெனா' புகழ் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தை விருத்தி சினிமாஸ் தயாரிக்கிறது. 'கேம் சேஞ்சர்' படத்தைத் தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் இந்தப் படம் டோலிவுட்டில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் ராம் சரணின் சம்பளம் மட்டும் ரூ 100 கோடி எனக் கூறப்படுகிறது. ராம் சரண் நடிப்பில் அண்மையில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்ததால், அடுத்து வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ராம் சரண் இருக்கிறார்.

பெட்டி திரைப்படம்: இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து முதல் பாடல் 'சிகிரி' தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலை ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். அவரது வித்தியாசமான நடன அசைவுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இத்திரைப்படத்தை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே 'உப்பென்னா' போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து 'தேவரா' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது, ராம் சரணுடன் இணைந்து 'பெட்டி' படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது


Click it and Unblock the Notifications











