Peddi : போட்ரா வெடிய.. ராம் சரணின் ‘பெட்டி‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பெட்டி'. இதில் ராம் சரண், கதாநாயகியாக ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், ராம் சரணின் அம்மாவாக லப்பர் பந்து நடிகை நடிகை ஸ்வாசிகா நடித்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு ராம் சரண் நடித்து இருக்கும் படம் தான் 'பெட்டி'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'சிகிரி' கடந்த ஆண்டு வெளியாகி இணையத்தில் சக்கை போடு போட்டது. சுமார் ரூ.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் ராம் சரணின் சம்பளம் மட்டும் ரூ 100 கோடி எனக் கூறப்படுகிறது.

Ram charan Janvi Kapoor peddi
Photo Credit:

பெட்டி திரைப்படம்: தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் பான் இந்தியா அளவில் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் பெரிய பிளானை போட்டுள்ளது. 'பெட்டி' படத்தின் டிஜிட்டல் உரிமைகளை ரூ.130 கோடிக்கு முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கி உள்ளது. மேலும், 'பெட்டி'யின் ஆடியோ உரிமைகளை 'டி சீரீஸ்' ரூ.20 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு: பெட்டி படத்தில் இருந்து ஏற்கனவே க்ளிம்ப்ஸ் வீடியோ, போஸ்டர் லுக் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும், படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், படத்தின் பணிகள் முடியாததால் படம் வெளியாகாத நிலையில், தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி 'பெட்டி' படம் ஜூன் 4ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பால் ராம் சரணின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X