சாக முடிவெடுத்த 7ஆம் அறிவு நடிகர்.. சாய் பாபா செய்த மாற்றங்கள்.. கனவில் வாங்கிய வரம்!

சென்னை: 7ஆம் அறிவு படத்தில் வில்லனுக்கு உதவி செய்பவராக நடித்திருப்பார் நடிகர் ராமநாதன். இவர் சினிமாக்களில் மட்டும் இல்லாமல் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னம், சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர். முருகதாஸ் போன்ற பல இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜியோடும் அவரது குடும்பத்தினரோடும் நெருக்கமாக பழகும் வாய்ப்பு ராமநாதனுக்கு கிடைத்தது. தான் ஒரு பிசினஸ்மேனாக இருந்ததையும், நஷ்டம் அடைந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அதேபோல் பல விளம்பரங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இவர் சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்மான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக சாய் பாபா என் வாழ்க்கையில் நிகழ்த்திய அதிசயம் என்னவென்று நடிகர் ராமநாதன் பகிர்ந்துகொண்டார். அதே போல் ஒருமுறை, கடன் கொடுத்த நபரை சந்தித்து பணத்தை திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, மூவர் அவரைத் தாக்கியதையும், மூவரையும் அவர் திருப்பித் தாக்கியதையும் கூறினார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது, அப்போது எனக்கு 40 வயது இருக்கும். தொழிலில் பெருத்த நஷ்டத்தில் கடனில் இருந்தேன். எனக்கு லட்சத்தில் கடன் கொடுத்தவருக்கு, கையில் இருந்த 10 ஆயிரத்தைக் கொடுக்கச் சென்றேன். அவர்கள் என்னை ஒரு அறைக்குள் விட்டு மூவர் சேர்ந்து அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நான் கராத்தே மாஸ்டர் தமிழ்மணியிடம் கராத்தே கற்றவன். உடனடியாக சுதாரித்துக் கொண்டேன். அவர்கள் லைட்டை அணைத்து தாக்கினார். நான் திருப்பி அடித்ததில் அவர்களில் ஒருவருக்கு மூக்கு உடைந்துவிட்டது. இன்னொருவருக்கு பல் விழுந்துவிட்டது. பின்னர் அந்த நபர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.

Sai Baba s Miracle In My Life Actor Ramanathan s Experience
Photo Credit:

இறக்க முடிவு: தன்னைத் தாக்கிய ஒருவருக்கு மனநிலை சரியில்லாத மகன் இருந்தான். அந்த பையன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அவர்களை காவல்துறையில் பிடித்துக் கொடுக்கமால் விட்டுவிட்டேன். கடனால் இறந்துபோகலாம் என முடிவெடுத்த எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் தைரியம் இல்லை. எனவே, இரவு தூங்கும்போது விநாயகரிடம் என்னை விடிவதற்குள் எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு படுத்தேன். அந்த இரவு, சத்ய சாய்பாபா கனவில் வந்து, "நீ தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாயா?" என்று கேட்டார். பிறகு பிள்ளையார், ஷீரடி சாய்பாபா, திருச்செந்தூர் முருகன், திருப்பதி வெங்கடாஜலபதி, இயேசு கிறிஸ்து என அனைவரும் காட்சியளித்தனர்.

வாழ்க்கை மாற்றம்: சாய்பாபா ராமநாதனை கட்டி அணைத்து, இனி கவலைப்பட வேண்டாம் என்றும், தான் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட், மாடல், ஸ்கிரிப்ட் ரைட்டர் என பல முகங்களைக் காண்பிப்பேன் என்றும் ஆசிர்வதித்தார் என்றும் கூறினார். அந்த கனவுக்குப் பின்னர்தான் எனக்கு நான் சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த கனவுக்கு முன்னர் தனக்கு டப்பிங் என்றால் என்னவென்றே தெரியாது, நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறினார். மேலும் அவருக்கு ஷீரடி சாய்பாபா அவரது வாழ்க்கையில் எப்படி எல்லாம் மாற்றங்களை ஏற்படுத்தினார் என்பதை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X