போயிட்டியேடா.. வடிவேல் பாலாஜியின் உடலை பார்த்து கதறிய நடிகர் ராமர்!
சென்னை: நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலை பார்த்து கதறியுள்ளார் நடிகர் ராமர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் வடிவேல் பாலாஜி.
அவரும் சக நடிகரான ராமரும் நெருங்கிய நண்பர்கள். சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாக இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.

சிரிக்க வைத்து..
ராமரின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் வடிவேல் பாலாஜி. இருவரும் இணைந்து எராளமான எபிசோடுகளில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சாப் போச்சு பகுதியில், பிரபலங்களை சிரிக்க வைக்க இருவரும் செய்யும் காமெடிகள் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

தொடர்ந்து அஞ்சலி
இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சேத்துப்பட்டில் உள்ள உடலுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

நடிகர் ராமர்
விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வடிவேல் பாலாஜியின் நெருங்கிய நண்பரான நடிகர் ராமரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

போயிட்டியேடா..
வடிவேல் பாலாஜியின் உடலை பார்த்து இப்படி போயிட்டியேடா என கதறி அழுத்தார். அவரை உடன் இருந்த பாலா உள்ளிட்ட சக நடிகர்கள் ஆறுதல் படுத்தினர். நேற்று வடிவேல் பாலாஜி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த ராமர், தான் மதுரையில் இருப்பதாக குரல் தழுதழுக்க பேசினார்.
Recommended Video

இரவோடு இரவாக
மருத்துவமனையில் பார்க்க சென்ற போது அவரை நேரில் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றார். இந்நிலையில் நண்பனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டும் என இரவோடு இரவாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார் நடிகர் ராமர்.


Click it and Unblock the Notifications











