இயேசுதான் என்னை காப்பாற்றினார்.. திடீரென கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பிரபல நடிகர்!

சென்னை: பிரபல நடிகர் திடீரென மதம் மாறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நடிகர் ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆவார். தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ராமராஜன், மக்கள் நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

நடிகர் மட்டுமின்றி எழுத்தாளர், இயக்குநர் என்ற பல முகங்களை கொண்ட ராமராஜன், 80களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். அவர் கலர் கலராக போடும் உடை அப்போது ட்ரென்ட்டானது.

புதிய ட்ரென்ட்

புதிய ட்ரென்ட்

இப்போதும் கலர் கலாராக உடை உடுத்தும் நபரை என்ன ராமராஜன் ஸ்டைலா என்று கலாய்ப்பதும் உண்டு. அந்தளவுக்கு ஆடை விஷயத்தில் புதிய ட்ரென்ட்டை செட் செய்தார்.

வசூல் மன்னன்

வசூல் மன்னன்

அவர் நடித்த கரகாட்டகாரன் படம் மதுரை மாவட்ட தியேட்டர்களில் ஓராண்டு ஓடியது. அப்போது ரஜினி, கமலுக்கு டஃப் கொடுத்தார் ராமராஜன். கிராமப்புற வசூல் மன்னன் என்று போற்றப்பட்டார் ராமராஜன்.

எம்பியானார்

எம்பியானார்

சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்த அவர், 90களில் மார்க்கெட்டை இழந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்து எம்பியானார். அரசியலிலும் மக்களின் வரவேற்பை பெற்றார்.

விபத்தில் சிக்கினார்

விபத்தில் சிக்கினார்

ஜெயலலிதாவுக்கு பின் ராமராஜன்தான் என்ற பேச்சு எழவும் கட்சியிலும் ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதில் சுயநினைவை இழந்தார். பின்பு நீண்ட நாட்களுக்கு பிறகு சுயநினைவுக்கு திரும்பினார் ராமராஜன்.

இயேசுதான் காப்பாற்றினார்

இயேசுதான் காப்பாற்றினார்

இந்நிலையில் நடிகர் ராமராஜன், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயேசுதான் என்னை காப்பாற்றினார் என அவர் மக்கள் கூட்டத்தில் பிரசங்கம் செய்யும் வீடியோவும் வெளியாகி வருகிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

மெகா ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தில் மாரியம்மா படாலுக்கு தீயெல்லாம் மிதித்தார் ராமராஜன். கோவில் திருவிழாவில் கரகம் வைத்து ஆடியவர், பல படங்களில் கோவிலில் சேவை செய்பவராக நடித்தவர் திடீரென மதம் மாறியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X