நடிகர் வீட்டில் நடந்த சோகம்.. உடலை பார்த்து பார்த்து கண்கலங்கி நின்ற ராமராஜன்!
சென்னை: தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான ராமராஜன் சாமானியன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ராமராஜனின் வீட்டில் சோகமான சம்பவம் ஒன்று நடந்து அவரை துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் ராமராஜன், உதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய ராமராஜன், 1986ம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் நாயகன் என்ற பட்டத்துடன் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த ராமராஜனுக்கு திருப்புமுணையை ஏற்படுத்திய படம் கரகாட்டக்காரன்.

கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அறிமுக நாயகியாக கனகாவின் நடிப்பு என இந்த படம் திரையரங்குகளில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் வரும் வாழைப்பழ காமெடி இன்றும் பலதரப்பட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு காமெடியாக உள்ளது. அதன்பிறகு பல படங்களில் நடித்த ராமராஜன் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அருணா, அருண் என இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு ராமராஜன் தனது மனைவி நளினியை பிரிந்தார்.
ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த ராமராஜனுக்கு படவாய்ப்பு இல்லாததால், 12 வருட இடைவெளிக்கு பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் ராமராஜனின் உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி இன்று மாலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 75 சகோதரி உயிரிழந்த செய்தி கேட்டதும் ராமராஜன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள மேலூர் சென்று கொண்டிருக்கிறார். புஷ்பவதியின் இறுதிச்சடங்கு நாளை மேலூரில் நடைபெற்று அவரின் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. சகோதரியை இழந்து வாடும் நடிகர் ராமராஜனுக்கு பலர் ஆறுதல் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











