கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் ராமாராஜன்.. முதல்வர்.. துணை முதல்வருக்கு நன்றி கூறி நெகிழ்ச்சி!
சென்னை : திரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் நலமுடன் இருப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற அய்யப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன் என்று ராமராஜன் கூறி உள்ளார் .
அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிவதை கண்டேன். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். உயர் தர சிகிச்சை அனைவருக்கும் அங்கு கிடைக்கிறது.

இதற்காக மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும். சுகாதார துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பெருமையுடன் சொல்லி இருக்கிறார் ராமராஜன்

சிகிச்சை முடிந்து இன்று வீட்டிற்கு வந்து விட்டேன். இந்த இடைபட்ட நாட்களில் எனக்காக பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், அலைபேசியிலும். நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும், நண்பர்களுக்கும். உற்றார் உறவினர்களுக்கும் . பத்திரிகை மற்றும் ஊடக துறை நண்பர்களுக்கும், மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் என் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்

பல பிரபலங்கள் இந்த கொரானாவால் மிகவும் கஷ்டபட்டு சித்ரவதை பட்டு வந்ததை நாம் சமீப காலமாக பார்த்து வருகிறோம் . எத்தனையோ பிரபலங்கள் உயிரை விட்டனர் . சிலர் கஷ்டப்பட்டு உயிர் பிழைத்து உள்ளனர் . அந்த வகையில் ராமராஜனும் ஒருவர்
பலரத பட்ட ரசிகர்கள் தொடர்ந்து ராமராஜனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மீண்டும் இயக்கம், நடிப்பு என்று 2021ஆம் ஆண்டு ஒரு ரௌண்டு வருவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வாழ்த்து கூறுகின்றனர். சிரித்த முகத்துடன் ராமராஜன் அனைவருக்கும் நன்றிகளை கூறி பெருமூச்சு விட்டுக்கொண்டு ஆனந்தமாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











