விஜய் சேதுபதிக்கு பொருத்தமாக கதை தயார் செய்திருக்கும் முன்னாள் ஹீரோ.. யாருன்னு பாருங்க!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியை இயக்குவதற்காக முன்னாள் ஹீரோ கதை தயார் செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1980, 90களில் டாப் நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். பெரும்பாலும் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
அவரது நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் உள்ளிட்ட சில படங்கள் 100 நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் வெற்றியை கொடுத்துள்ளது.

மீண்டும் இயக்க ஆசை
நடிகர் ராமராஜன் படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் படங்களை இயக்கியும் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கும் ராமராஜன் மீண்டும் படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.

பேட்டியில் தகவல்
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ராமராஜன், தனது படம் குறித்த தகவல்களை கூறியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது. நான் கதாநாயகனாக 44 படங்களில் நடித்து இருக்கிறேன். 5 படங்களை இயக்கி உள்ளேன்.

புதிய படமும்..
இந்த 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் படங்களாகவே இருந்தது. நான் இயக்க இருக்கும் புதிய படமும் அப்படிதான் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையை கொண்ட படமாக இருக்கும்.

அவருக்கு பொருத்தமாக இருக்கும்
எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன். கடைசி வரை ஜெயலலிதாவின் தொண்டனாகவே இருப்பேன். தற்போது நான் தயார் செய்து கொண்டிருக்கும் கதை விஜய்சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும்.. இவ்வாறு நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











