Ramcharan: புஷ்பா இயக்குநருடன் கைகோர்க்கும் ராம்சரண்.. மேஜிக் கூட்டணியால் ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: நடிகர் ராம்சரண், தெலுங்கில் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை கொண்டவராக உள்ளவர். இவரது நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை இவருக்கு பெற்றுத் தந்தது. படத்தில் ஜூனியர் என்டிஆரும் ராம்சரணும் போட்டிப் போட்டு நடித்திருந்தனர். படம் கடந்த ஆண்டில் ஆஸ்கர் விருதையும் பெற்றது. இந்நிலையில் தற்போது இயக்குநர் ஷங்கர் டைரக்ஷனில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ராம்சரண் புச்சிபாபு இயக்கத்தில் ஆர்சி16 படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அவரது அடுத்தப்படம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. புஷ்பா 2 படத்தை இயக்கிவரும் சுகுமார் இயக்கத்தில் ஆர்சி17 படத்தில் ராம்சரண் இணையவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராம்சரண்: நடிகர் ராம்சரண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்தாலும் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். நடிகர் சிரஞ்சீவியின் மகனாக இருந்தாலும் தன்னுடைய லுக், நடிப்பு, ஆக்ஷன் போன்ற விஷயங்களால் ரசிகர்களை கொள்ளைக் கொண்டு வருபவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டார். இந்தப் படம் ஆஸ்கர் விருதையும் பெற்ற நிலையில் வசூலிலும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் ராம்சரண்.
கேம் சேஞ்சர் படம்: தன்னுடைய அப்பா சிரஞ்சீவியுடன் ராம்சரண் இணைந்து நடித்திருந்த ஆச்சார்யா படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ஏராளமான ரசிகர்களின் விருப்ப லிஸ்ட்டில் இடம்பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஷங்கரின் இயக்கத்தில் ஏப்ரல் மாதத்தில் இந்தியன் 2 படமும் டிசம்பர் மாதத்தில் இந்தியன் 3 படமும் ரிலீசாகவுள்ள நிலையில் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்திற்கும் ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சுகுமார் இயக்கத்தில் ராம்சரண்: இந்தப் படங்களை தொடர்ந்து ராம்சரண் அடுத்ததாக தன்னுடைய ஆர்சி16 படத்திற்காக புச்சிபாபு இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அடுத்ததாக RC17 படத்தில் ராம்சரண் இணையவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூன் -சுகுமார் காம்பினேஷன் டோலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் மேஜிக் செய்திருந்தது.
ரசிகர்கள் உற்சாகம்: இதையடுத்து தற்போது இதே கூட்டணியில் புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் ஆகஸ்ட்டில் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இதனிடையே டோலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள ராம்சரண் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்துவரும் நிலையில், தற்போது சுகுமாருடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடம் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த காம்பினேஷன் மிரட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











