Game Changer: கேம் சேஞ்சர் படத்தில் இரட்டை வேடங்களில் கலக்கும் ராம் சரண்.. வெளியானது கேரக்டர் பெயர்!
ஐதராபாத்: நடிகர் ராம்சரண் -இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் கேம் சேஞ்சர். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படத்துடன் சேர்த்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களின் சூட்டிங்கை முடித்துள்ளார் ஷங்கர். படத்தில் கியாரா அத்வானி மற்றும் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் தில்ராஜு தயாரித்து வரும் சூழலில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமன் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளன. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமான தமன், தற்போது அவரது படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். மேலும் எழுத்தாளர் சு வெங்கடேசன், பாடல் ஆசிரியர் விவேக், பாலிவுட் இயக்குனர் பஹத் ஷாம்ஜி ஆகியோரும் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

நடிகர் ராம்சரண்: நடிகர் ராம்சரண் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சூழலில் இயக்குனர் ஷங்கருடன் அவர் இணைந்து நடித்து வரும் படம் கேம் சேஞ்சர். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ளனர். கியாரா அத்வானி படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாகியுள்ளார்.
ஷங்கரின் பிரம்மாண்டம்: இந்த படத்தின் கதைக்கருவை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். மேலும் பிரபல எழுத்தாளர் சு வெங்கடேசன், பாடல் ஆசிரியர் விவேக், பாலிவுட் இயக்குனர் பர்ஹாத் சாம்ஜி ஆகியோர் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர். ராம்சரணின் பிறந்த நாளையொட்டி கடந்த ஆண்டிலேயே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த படத்தில் கலெக்டராக அவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இதில் ஸ்மார்ட் லுக்கில் ராம்சரண் காணப்பட்டார்.

கியாரா அத்வானி வீடியோ: இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் நாயகி கியாரா அத்வானியின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த படத்தில் ராம்சரண் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ராம்சரனின் ஃப்ளாஷ் பேக் கேரக்டர் பெயர் அப்பண்ணா என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டு அதற்கு ஏற்ப ஷூட்டிங்கை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார்.

பிரம்மாண்ட க்ளைமாக்ஸ்: படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்காக 1000 ஸ்டாண்ட் கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமான ஷூட்டிங்கை ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஆர்ஆர்ஆர் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ராம்சரண் அதற்கு முன்பும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது 15வது படமாக உருவாகிவரும் கேம்ஸ் சேஞ்சர் அவரது கேரியர் பெஸ்ட் படமாக அமையும் என்று என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











