அஜித் - ஷாலினி காதலை பிரிக்க பார்த்த ரமேஷ் கண்ணா... அமர்க்களம் படத்தில் நடந்த ரணகளம்!

சென்னை : இயக்குனர், நடிகர், காமெடியன் என பல முகங்களை கொண்டுள்ளவர் நடிகர் ரமேஷ் கண்ணா.
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.

ரமேஷ் கண்ணா குணச்சித்திர கதாபாத்திரங்கள் செய்வதில் மிகவும் வல்லவர். இயக்குனர் சங்கம் மற்றும் பல சினிமா சங்க உறுப்பினர்களுடன் பண்பாக பழக கூடியவர்.

இந்த நிலையில் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித் - ஷாலினி காதலை பிரிக்க பார்த்தேன் என மனம் திறந்து பேசியுள்ளார்.

அமர்க்களம்

அமர்க்களம்

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய நடிகர் ரமேஷ் கண்ணா தொடரும் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். நடிகர், இயக்குனர், காமெடியன் என பல முகங்களைக் கொண்டுள்ள ரமேஷ் கண்ணா அமர்க்களம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அஜித் மற்றும் சரண் கூட்டணியில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. இந்நிலையில் 1999-ஆம் ஆண்டு சரண் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான அமர்க்களம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

அஜித் ஷாலினி காதல்

அஜித் ஷாலினி காதல்

அதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த அஜித் அமர்க்களம் படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அமர்க்களம் படத்தில் கதாநாயகியாக நடிகை ஷாலினி நடித்திருப்பார் முதலில் அமர்க்களம் படத்தில் நடிப்பதற்காக ஷாலினியை அணுகியபோது நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். பின் ஷாலினி அஜித் கேட்டுக்கொண்டதற்கு பிறகு அமர்க்களம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அதன் பிறகு இந்த படத்தில் நடிக்கும்போது ஷாலினி இடம் அஜித் தனது காதலை வெளிப்படுத்தினார். பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

வசூல் சாதனைகளை

வசூல் சாதனைகளை

இப்பொழுது அஜித் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக உள்ளார் அஜித் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

திருமணம் குறித்து அறிவுரை

திருமணம் குறித்து அறிவுரை

இந்த நிலையில் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான அமர்க்களம் படத்தில் பணியாற்றிய போது அஜித்திடம் ரமேஷ் கண்ணா திருமணம் குறித்து அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். அப்போது அஜித் உனக்கு இப்போ மிகப் பெரிய மாஸ் ஓபனிங் உள்ளது. எனவே பீக்ல இருக்கும்போதே சீக்கிரமாக ஒரு நல்ல குடும்ப பாங்கான பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்க, நடிகைகள் யாரையும் காதலித்து கல்யாணம் செய்யாதே என்று சீரீயஸாக டிஸ்கஸ் செய்து உள்ளார் .அஜித் அமைதியாக கேட்டு கொண்டு பதில் ஏதும் பேசாமல் அமைத்து காத்து உள்ளார் .

குடும்ப பெண்ணை கல்யாணம் பண்ணிக்க

குடும்ப பெண்ணை கல்யாணம் பண்ணிக்க

நடிகை திருமணம் என்பது ஒழுங்காக வராது என அஜித்திடம் ரமேஷ் கண்ணா அட்வைஸ் கூறியதை பார்த்த இயக்குனர் சரண், அஜித்- ஷாலினி இருவரும் காதலித்து கொண்டுள்ளார்கள், உனக்கு எதுக்கு இந்த வேலை என திட்டி உள்ளார். அதனைக் கேள்விப்பட்ட ரமேஷ்கண்ணா அதிர்ந்து போனார். இந்த விஷயம் பின் ஷாலினிக்கு தெரிந்த பிறகு அவர் ஜாலியாக எடுத்துக் கொண்டு அடிக்கடி ரமேஷ்கண்ணாவை கிண்டல் செய்வாராம். இவ்வாறு அமர்க்களம் படத்தில் ரமேஷ் கண்ணா ரணகளம் செய்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X