twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “சேரனை மட்டுமல்ல பாக்யராஜையும் இப்படித்தான் பேசினார்”... சரவணன் பற்றி வீடியோ வெளியிட்ட ரமேஷ் கண்ணா!

    நடிகர் சரவணனின் குணம் பற்றி இயக்குநர் ரமேஷ்கண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    |

    சென்னை : சேரனை மரியாதைக் குறைவாகப் பேசிய விவகாரம் தொடர்பாக சரவணனுக்கு அறிவுரை கூறி நடிகரும், இயக்குநருமான ரமேஷ்கண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் மீரா, சேரனை ஒரு மாதிரி அவமானப் படுத்தினார் என்றால், இந்த வாரம் சரவணன் வேறு மாதிரி அவமானப்படுத்தி இருக்கிறார். சக போட்டியாளர்களுடன் எப்போதும், தன் மனதில் பட்டதை அப்படியே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் சரவணன்.

    ஆனால், அவரது இந்தப் போக்கால் சக போட்டியாளர்கள் சமயத்தில் காயமடைகின்றனர். அதிலும் குறிப்பாக நேற்று சேரனிடம் அவர் நடந்து கொண்ட விதம் பலவித விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் நடிகர் ரமேஷ் கண்ணா இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சரவணன் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார்.

    சண்டை:

    சண்டை:

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரனுக்கும், சரவணணுக்கு இடையே நடந்த சண்டையை தான் இப்போது உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறார். நிச்சயம் சரவணன் அவ்வாறு தவறு செய்திருக்க மாட்டார். அவர் செய்யவும் கூடாது.

    மரியாதை தேவை:

    மரியாதை தேவை:

    ஏனென்றால் சரவணனுடன் சேரன் வயதில் சிறியவராகவோ, பெரியவராகவோ இருக்கலாம். ஆனால் அவருடைய படைப்புகளுக்கு நாம் மரியாதை கொடுத்தாக வேண்டும். பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற அருமையான சினிமாக்களை தந்தவர் அவர்.

    பொதுவெளி:

    பொதுவெளி:

    அவரை பொதுவெளியில் இப்படி பேசக்கூடாது. ஏனெனில் அந்த (பிக் பாஸ்) நிகழ்ச்சியை குழந்தைகள் உள்பட நிறைய பேர் பார்க்கிறார்கள். இதன் மூலம் உங்கள் மீது இருக்கும் மரியாதை தான் குறைந்துவிடும்.

    டென்ஷன் பார்ட்டி:

    டென்ஷன் பார்ட்டி:

    ஏற்கனவே சரவணன் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி தான். அவருடன் நான் அபிராமி, பொண்டாட்டி ராஜ்ஜியம் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவர் நல்லவர் தான். ஆனால் சட்டென கோபப்பட்டுவிடுவார்.

    சர்ச்சைப் பேச்சு:

    சர்ச்சைப் பேச்சு:

    சரவணனுக்கு கோபம் நிறைய வரும். ஒருபேட்டியில் பாக்யராஜ் நடிகரே இல்லை என்று பேசிவிட்டார். எம்ஜிஆரால் தன்னுடைய கலையுலக வாரிசு என அழைக்கப்பட்டவரை நடிகரே இல்லை என எப்படி சொல்கிறீர்கள் என நானே அவரிடம் கேட்டேன். எனவே சரவணன் கொஞ்சம் கோபத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்.

    மன்னிப்பு கேட்பார்:

    மன்னிப்பு கேட்பார்:

    பெரியார் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னுடன் வயதில் சிறியவராக இருந்தாலும் வாங்க, போங்க என மரியாதை கொடுத்து பேசுவார். அப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் தமிழர் பரம்பரையில் இருந்து வந்தவர்கள் நாம். ஆகவே சரவணன் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இரண்டு, மூன்று முறை மன்னிப்பு கேட்டிருக்கிறார். எனவே இப்போதும் மன்னிப்பு கேட்பார் என நினைக்கிறேன்", என ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.

    English summary
    "Actor Saravanan should change his approach and apologise to director Cheran", said actor Ramesh Kanna in a video statement.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X