நடிகர் ரமேஷ் திலகிற்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது !
சென்னை : தமிழில் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரமேஷ் திலகிற்கு குழந்தை பிறந்துள்ளது.
விஜய் சேதுபதியுடன் இணைந்து சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய், காதலும் கடந்து போகும், ஆண்டவன் கட்டளை, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என பல திரைப்படங்களில் நடித்தவர் ரமேஷ் திலக்.
இந்நிலையில் இவருக்கு இன்று ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை அறிந்த இவரது ரசிகர்கள் பலரும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

சூதுகவ்வும்
பிரபல ரேடியோ அலைவரிசை நிறுவனமான சூரியன் எப்எம்-ல் ஆர்.ஜே-வாக தனது வாழ்க்கையை தொடங்கிய ரமேஷ் திலக் தமிழ் திரைப்படத் துறையில் தற்போது பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும் திரைப்படத்தில் தன்னுடைய அசால்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த ரமேஷ் இதற்கு முன் மாப்பிள்ளை, மங்காத்தா மற்றும் மெரினா போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

மாஸ்டர் திரைப்படத்திலும்
இவ்வாறு இவருக்கு சூதுகவ்வும் திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தப் பின் விஜய் சேதுபதி நடிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டு வரும் இவர் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் இணைந்து சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய், காதலும் கடந்து போகும், ஆண்டவன் கட்டளை, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஓ மை கடவுளே உள்பட பல திரைப்படங்களில் நடித்து வந்த ரமேஷ் தற்பொழுது விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகிவரும் மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இருவீட்டாரின் சம்மதத்துடன்
முதலில் ஆர்.ஜே-வாக தனது வாழ்க்கையை தொடங்கிய ரமேஷ் பின்னர் திரைப்படங்களிலும் குறும்படங்களிலும் நடித்து வந்தார். இவ்வாறு ஆர்.ஜே -வாக பணியாற்றிய ரமேஷ் தன்னுடன் பணியாற்றிய ஆர்.ஜே நவலட்சுமி என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். மேலும் ஆர்.ஜே நவலட்சுமி தந்தை தமிழில் பல பிரபலமான திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் வாழ்த்து மழை
இவ்வாறு பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்ட ரமேஷ் நவலட்சுமி தம்பதிக்கு தற்பொழுது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை சமூக வலைத்தளங்களின் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்திய ரமேஷ் தற்பொழுது பலரின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

ரசிகர்களுடன் பகிர்ந்து
இன்று காலை தனியார் மருத்துவமனை ஒன்றில் ரமேஷ் திலக்-நவலட்சுமி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை ரமேஷ் திலக் தனது டுவிட்டரில் 'எனக்கு ஒரு தலைவன் பிறந்திருக்கிறான்' என தலைப்பிட்டு, இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











