Dulquer salman: உலகநாயகன் போன்றவர் துல்கர் சல்மான்.. 40 நாள் இருட்டு ரூம்ல இருந்தாரு.. ராம்கி பளீச்!

சென்னை: நடிகர் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில்பு நடிகர்கள் ராம்கி, துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். உலகநாயகன் கமல்ஹாசனை போன்ற டெடிகேஷனுடன் பணியாற்றுபவர் துல்கர் என்று ராம்கி நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கி அட்லூரி எவ்வளவு பிரம்மாண்டமான காட்சியை படமாக்கினாலும் தன்னுடைய அமைதியை எப்போதுமே கைவிட்டதில்லை என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

ramki dulquer salman diwali 2024 2024

லக்கி பாஸ்கர் படம்: நடிகர் துல்கர் சல்மான். மீனாட்சி சவுத்ரி. ராம்கி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக இந்தப் படம் செப்டம்பர் மாதத்திலேயே ரிலீசுக்கு தயாரான நிலையில் விஜய்யின் கோட் படத்தின் ரிலீசையடுத்து இந்த படத்தின் ரிலீஸ், தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய அளவில் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

நடிகர் துல்கர் சல்மான்: கடந்த இரு ஆண்டுகளாக துல்கர் சல்மான் நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டுமே ரிலீசாகியுள்ளது. அந்த படமும் சொதப்பலான ரிசல்ட்டையே அவருக்கு கொடுத்த நிலையில் லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்ட அடுத்தடுத்த பிரமோஷன்கள் படத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பீரியட் படமாக லக்கி பாஸ்கர் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் துல்கர் சல்மான் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சிறப்பான கெட்டப்பில் காணப்படுகிறார். அவரது மனைவியாக மீனாட்சி சவுத்ரி இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்களது காம்பினேஷன் மிகச் சிறப்பாக இந்த படத்தில் ஒர்க்-அவுட் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ramki dulquer salman diwali 2024 2024

லக்கிற்கு ராம்கி விளக்கம்: முன்னதாக தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தில் ராம்கியும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். துல்கர் சல்மானுடன் 35 முதல் 40 நாட்கள் இந்தப் படத்திற்காக தான் இணைந்து நடித்ததாகவும் மிகப்பெரிய அனுபவத்தை இந்த படம் தனக்கு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். லக் என்பதற்கு புதிய விளக்கத்தை ராம்கி கொடுத்துள்ளார். நாம் வாய்ப்புக்காக காத்திருக்கும் போது அந்த வாய்ப்பு நம் கதவை தட்டும் என்றும் அப்போது அதை சரியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அதுவே லக் என்றும் அவர் கூறியுள்ளார்.

கமல்ஹாசனை போன்றவர் துல்கர்: படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்றும் ராம்கி இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனை போன்றவர் துல்கர் சல்மான் என்றும் அதிகமான டெடிகேஷனுடன் அவர் தன்னுடைய படங்களில் வேலை செய்து வருவதாகவும் ராம்கி பாராட்டு தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாகவே பான் இந்தியா ஸ்டாராக உள்ள கமல்ஹாசன், தன்னுடைய படங்கள் வெளியாகும் அடுத்தடுத்த மொழிகளில் தானே டப்பிங் பேசுவார் என்று ராம்கி கூறியுள்ளார். ஒரு படத்தில் நடிப்பதை விட கடினமானது டப்பிங் பேசுவது என்றும் சூட்டிங் ஸ்பாட்டில் தான் நடித்த அந்த ஃபீலை மீண்டும் டப்பிங்கின்மூலம் அந்த கேரக்டருக்கு கொடுக்க வேண்டும் என்றும் ராம்கி சுட்டிக் காட்டியள்ளார்.

இருட்டு ரூமில் 40 நாட்கள்: இந்த வகையில் தன்னுடைய படங்களின் அடுத்தடுத்த மொழிகளில் கமல்ஹாசனின் அதேபோன்ற டெடிகேஷனுடன் துல்கர் சல்மானும் கொடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக துல்கர் நடிப்பில் வெளியான சீதாராமம் உள்ளிட்ட படங்களுக்கு அனைத்து மொழிகளிலும் அவர் டப்பிங் பேசிய நிலையில் தற்போது லக்கி பாஸ்கர் படத்திலும் நான்கு மொழிகளில் அவர் டப்பிங் பேசியுள்ளதாகவும் ராம்கி மேலும் தெரிவித்துள்ளார். இந்த டப்பிங்கிற்காக தொடர்ந்து 40 நாட்கள் இருட்டு ரூமில் அவர் அடைந்து கிடந்ததாகவும் ராம்கி குறிப்பிட்டுள்ளார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் அமையும் என்றும் ராம்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X