வம்பு செய்த கும்பல்.. அடித்து ஓடவிட்ட கேப்டன்.. அவரை கண்ட்ரோல் பண்ணவே முடியல.. ராம்கி சொன்ன விஷயம்!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து இருந்தாலும், நடிகர்கள் பலரும், அவரை மறக்காமல் அவரைப் பற்றி பல விஷயத்தை பேசி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ராம்கி, விஜயகாந்துடன் செந்தூரப்பூவே படத்தில் நடித்த போது, நடிகரிடம் வம்பு செய்த கும்பலை, தனி ஆளாக அடித்து ஓடவிட்ட சம்பவம் பற்றி பேசி உள்ளார். அந்த பேட்டி வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
நடிகர் ராம்கி indiaglitz.com யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், செந்தூரப்பூவே படத்தின் படப்பிடிப்பில் நானும் விஜயகாந்த் அவர்களும் நடித்துக் கொண்டிருந்தோம். அப்போது, திடீரென 4 பேர் குடித்துவிட்டு மணலில் படுத்து கொண்டிருந்த 2 நடிகர்களை சீண்டி கலாட்டா செய்து நக்கலடித்து வரம்பு மீறி பேசிக்கொண்டு இருந்தனர். முதலில் இதை கண்டுக்கொள்ளாமல் விஜயகாந்த் பொறுமையாகத்தான் இருந்தார். திடீரென கேப்டன் விஜயகாந்த், அந்த நபரை பளார் என்று அறைந்து விட்டார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனையாகி கடைசியில் படப்பிடிப்பே நின்று போகும் அளவிற்கு பெரிய சண்டையாகி விட்டது. பின் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் அவரை சமாதானப்படுத்த, அவர்கள் அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டார்கள்

விளாசிய விஜயகாந்த்: பின் இருபது நிமிடங்கள் கழித்து ஓடிப்போன அந்த நபர், ஆட்களை கூட்டி வந்து படப்பிடிப்பு தளத்திலிருந்த விளக்குகளை ஒவ்வொன்றாக கல்லை வீசியும், இரும்பு கம்பியை வைத்தும் அடித்து நொறுக்கிக் கொண்டே இருந்தார். அங்கிருந்த கார் மீது கற்களை வீசிக்கொண்டே இருந்தார். இதை பார்த்து அனைவரும் ஒரு கணம் பயந்துவிட்டோம். யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது கேப்டன் விஜயகாந்த் சார், அங்கிருந்த பல்பை உருவி அதை கையில் எடுத்து அனைவரையும் வாங்கடா பார்ப்போம் என்பது போல, வீசினார். படப்பிடிப்புதளத்தில் இருந்த அனைவரும் அவரை தடுக்க முயற்சி செய்கிறோம். ஆனால், யாராலும் அவரை கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் நிஜமாக நடந்த சண்டையை பார்த்து நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன்.
தனி ஆளாக: யாருடைய உதவியையும் எதிர்பார்த்து அவர் நிற்கவில்லை. தனி நபராகவே இறங்கி மொத்தபேரையும் அடித்து விரட்டினார். பின் அங்கிருந்த பெண்களை எல்லாம், ஒரு வண்டியில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு விடாமல், அவர்களை துரத்தி துரத்தி அடித்தார்.இந்த விஷயம் அதற்குள் ராதாரவிக்கு தெரியவரவும், அவரும் கிளம்பி வந்து, அந்த கும்பலிடம் பஞ்சாயத்து செய்தார் என்று நடிகர் ராம்கி அந்த பேட்டியில் விஜயகாந்த் பற்றி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











