ராணாவின் காதலை ஏற்ற காதலி.. டிவிட்டர்ல இப்போ இதான் ஹாட்.. பொண்ணு யாருன்னு பாருங்க!

சென்னை: பாகுபலி நடிகர் ராணா டக்குபதி தனது காதலை அவரது காதலி ஏற்றுக்கொண்டு விட்டதாக சோஷியல் மீடியாவில் செம ஹேப்பியாக அறிவித்திருக்கிறார்.

Recommended Video

Wow: Rana Daggubati confirms his relationship | Miheeka Bajaj

நடிகர் ராணா டக்குபதி பிரபல தெலுங்கு திரைக்குடும்பத்தை சேர்ந்தவர்.இவரது தாத்தா, அப்பா என பலரும் தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற தயாரிப்பாளர்கள்.

2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து இந்தி சினிமாவிலும் அறிமுகமானார்.

பாகுபலி

பாகுபலி

தெலுங்கு இந்தி என கலக்கி வந்த ராணா டக்குபதி, அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் கால் பதித்தார். ராணா நடிப்பில் வெளியான பாகுபலி சீரிஸ் படங்கள் பட்டைய கிளப்பின. பல்வால் தேவனாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தினார் ராணா டக்குபதி.

திரிஷாவுடன் காதல்

திரிஷாவுடன் காதல்

பிரபாஸ்க்கு போட்டியாக ஒவ்வொரு காட்சியிலும் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ராணா. நடிகை திரிஷாவும் ராணா டக்குப்பதியும் தீவிரமாக காதலித்து வந்தனர். கோலிவுட் டோலிவுட் என கொடிக் கட்டி பறந்தது இந்த செய்தி.

கமிட்மெண்ட் இல்லை

கமிட்மெண்ட் இல்லை

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் காதல் பிரேக்கப் ஆனது. இதனை தொடர்ந்து, இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். நடிகர் ராணா டக்குபதி காதல், திருமணம் என்ற எந்த கமிட்மென்ட்டுமே இல்லாமல் இருந்தார்.

எஸ் சொல்லிவிட்டார்

எஸ் சொல்லிவிட்டார்

இந்நிலையில் 35 வயதான ராணா டக்குபதி இன்று தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் மூலம் தனது காதலை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய காதலுக்கு அவர் எஸ் சொல்லிவிட்டதாக கூறி தனது காதலியின் போட்டோவுடன் ஒரு போஸ்ட்டை ஷேர் செய்திருக்கிறார்.

மிஹீகா பஜாஜ்

மிஹீகா பஜாஜ்

ராணாவின் காதலி ஹைதராபாதைச் சேர்ந்த இன்டீரியர் டிஸைனர் மிஹீகா பஜாஜ். சொந்தமாக ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஈவென்ட் மேனேஜ்மென்ட், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார் மிஹீகா.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

ராணா டக்குப்பதியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். திரைத்துறை பிரபலங்களான நடிகர் ஆர்யா, அனில் கபூர், தமன்னா, சமந்தா, ஸ்ருதிஹாசன், அடா ஷர்மா, பார்வதி நாயர், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X