Rana: திரிஷாவுடன் டேட்டிங் செய்தேன்.. ஆனா.. நடிகர் ராணா வெளிப்படுத்திய சீக்ரெட்!

சென்னை: நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அடுத்தடுத்த மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 20 ஆண்டுகாலத்தை கடந்து திரிஷா சினிமாவில் நடித்து வரும் நிலையில் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

அவரது பர்சனல் வாழ்க்கை குறித்து பல தகவல்கள் கிசுகிசுக்களாக உலவி வருகின்றன. அவர் சினிமாவில் இருந்து விலகி விஜய்யின் அரசியல் கட்சியில் இணையுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை அவரது அம்மா உமா கிருஷ்ணன் மறுத்துள்ளார். இந்நிலையில் திரிஷாவுடன் தான் டேட்டிங் செய்ததாக நடிகர் ராணா தனது பேட்டியொன்றில் முன்னதாக கூறியிருந்தது தற்போது வைரலாகி வருகிறது.

rana daggubati trisha tamil cinema

நடிகை திரிஷா: நடிகை திரிஷா 20 ஆண்டுகளை கடந்த தன்னுடைய திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து பல ஹிட்டுகளை கொடுத்துள்ளார். விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து தமிழில் நடித்துள்ள திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான கோட் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் திரிஷா நடித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

பிசியான திரிஷா: சில காலங்கள் வாய்ப்புகள் குறைந்து காணப்பட்ட திரிஷா, தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பறந்து பறந்து நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் அவர் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் திரிஷா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு மற்றும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில் அவரது அம்மா உமா கிருஷ்ணன் இந்த தகவலை மறுத்துள்ளார். இதனால் திரிஷா ரசிகர்கள் தற்போது ஆசுவாசப்படுத்தி கொண்டுள்ளனர்.

திரிஷாவுடன் டேட்டிங் செய்த ராணா: திரிஷா குறித்த கிசுசிசுக்கள் வருவது எப்போதுமே குறையாதது. அவர் விஜய்யுடன் இணைய உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் முன்னதாக திரிஷா, ராணா உள்ளிட்ட சில நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்டார். இந்நிலையில் இந்த விஷயம் குறித்து நடிகர் ராணா பேட்டி ஒன்றில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் நடிகை திரிஷாவுடன் தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக நண்பராக உள்ளதாக தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் ஒரு கட்டத்தில் டேட்டிங் செய்ததாகவும் ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் ராணா தெரிவித்துள்ளார்.

முரட்டு சிங்கிளாக திரிஷா: ராணாவின் இந்த பேட்டி மூலம் முன்னதாக அவருடன் திரிஷா டேட்டிங்கில் இருப்பதாக வெளியான தகவல் உறுதியாகியுள்ளது. 40 வயதான நிலையில் திரிஷா தொடர்ந்து சிங்கிளாகவே இருந்து வருகிறார். தன்னுடைய நண்பர்கள் சிலர், திருமணம் செய்துக் கொண்டு விவாகரத்தான நிலையில், தனக்கு விவாகரத்தில் உடன்பாடு இல்லை என்றும் அதனால் தன்னையும் தன்னுடைய வேலையையும் நேசிக்கும் ஒருவர் கிடைக்கும்வரை தான் திருமணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்றும் முன்னதாக திரிஷா கூறியநிலையில், அவருக்கு உரிப மணமகன் கிடைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X