த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு வந்த சோதனை... தாடி பாலாஜி காமெடி மாதிரி ஆன ராணாவின் நிலை!

ஹைதராபாத்: தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ராணா, தற்போது வெப் சீரிஸிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

'ராணா நாயுடு' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

அடல்ட் வெப் சீரிஸ்ஸாக வெளியான ராணா நாயுடு ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்புப் பெற்றது.

இந்நிலையில், இந்த வெப் சீரிஸ்ஸின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராணா, அவரது ஹெல்த் கண்டிஷன் குறித்து மனம் திறந்துள்ளார்.

 பாகுபலி பல்வாள்தேவன்

பாகுபலி பல்வாள்தேவன்

2010ம் ஆண்டு ரிலீஸான லீடர் திரைப்படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் ராணா. தமிழில் அஜித்தின் ஆரம்பம் படத்தில் அவரது நண்பனாக கேமியோ ரோலில் நடித்திருந்தார். ராணாவின் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பாகுபலி. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்த ராணா, பல்வாள் தேவன் கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

 ராணா நாயுடு வெப் சீரிஸ்

ராணா நாயுடு வெப் சீரிஸ்

பாகுபலி படத்திற்குப் பின்னர் டோலிவுட், பாலிவுட் என இரண்டு பக்கமும் பிஸியாக நடித்து வருகிறார் ராணா. இந்நிலையில், நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள 'ராணா நாயுடு' என்ற வெப் சீரிஸில் தாறுமாறாக இறங்கி அடித்துள்ளார். ஏராளமான அடல்ட் சீன்ஸ், அளவுக்கதிகமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான ராணா நாயுடு வெப் சீரிஸ், ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து 2 வாரங்களாக ஓடிடி ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 ஹெல்த் அப்டேட் கொடுத்த ராணா

ஹெல்த் அப்டேட் கொடுத்த ராணா

இந்நிலையில், ராணா நாயுடு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தனது ஹெல்த் கண்டிஷன் பற்றி ராணா பேசியது வைரலாகி வருகிறது. அதாவது தனது உடலில் பல பிரச்சினைகள் இருக்கிறது என மனம் திறந்து கூறினார். தனது வலது கண் செயல்படவில்லை என்றும், அதனால் இடது கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் என கூறினார். தனது வலது கண் உயிரிழந்த ஒருவரின் கண் எனவும். இதற்காக கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையும் கூறியுள்ளார். மேலும், இடது கண்ணை மூடினால் தன்னால் எதையும் பார்க்க முடியாது என்ற உண்மையையும் கூறியுள்ளார் ராணா.

 ராணாவின் ரசிகர்கள் கவலை

ராணாவின் ரசிகர்கள் கவலை

தொடர்ந்து பேசிய அவர், தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதையும் ஓபனாக கூறியுள்ளார். சிலர் உடல் பிரச்சினையால் உடைந்து விடுவார்கள், ஆனால் தான் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக இருந்தேன் எனவும் பேசியுள்ளார். இதுபோன்ற நேரங்களில் நமக்கு அழுத்தம் ஏற்படும். ஆனால் எல்லா பிரச்சினைகளும் சரியாகும் எனவும் ராணா தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ராணாவின் ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து கவலையில் உள்ளனர்.

 த்ரிஷாவின் முன்னாள் காதலன்

த்ரிஷாவின் முன்னாள் காதலன்

ராணாவும் நடிகை த்ரிஷாவும் காதலித்து வருவதாக சில வருடங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. இருவரும் திருணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அதன்பிறகு இருவருமே பிரேக்அப் செய்துகொண்டனர். இந்நிலையில், ஒரு காமெடி காட்சியில், விவேக்கிடம் தனது உடல்நிலை குறித்து சோகமாக பேசும் தாடி பாலாஜி, கண் பார்வை குறைபாடு முதல் அல்சர், பைல்ஸ் என உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் இருப்பதாகக் கூறுவார். ராணாவும் அதுபோன்று அவரது உடல்நிலை குறித்து ஓபனாக பேசியது வைரலாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X