ஹாலிவுட் நடிகருக்கு கொக்கி போட்ட பாகுபலி தயாரிப்பாளர்.. நான் இரண்டாவது தேர்வுதான் - ராணா டகுபதி
ஹைதராபாத்: 2015ஆம் ஆண்டு வெளியான படம் பாகுபலி. இந்தப் படத்தினை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. இந்த படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது.
இந்தப் படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் 2015ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டும் வெளியானது. இந்தப் படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 3,100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதாவது முதல் பாகம் 650 கோடியும் இரண்டாம் பாகம் 2500 கோடியும் வசூல் செய்தது.

படத்தில் பிரபாஸ் அம்ரேந்திர பாகுபலி மற்றும் மகேந்திர பாகுபலி என இரட்டை வேடங்களில் நடித்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக இந்த எதிர்பார்ப்பு, கட்டப்பா ஏன் பகுபலிய குத்தினாரு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டது. இதனாலே இரண்டாம் பாகத்தின் வசூல் அதிகரித்தது.

முதல் பாகம் தென் இந்தியாவில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் மற்றும் இந்தியாவைக் கடந்து மற்ற நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் பல்வாழ் தேவன் கதாதாபாத்திரத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் ராணா டகுபதி.

இந்த படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக தனது உடலை கட்டுமஸ்தாக உருவாக்க கடும் முயற்சிகளைச் செய்து அசத்தினார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் பல்வாழ் தேவன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டது நான் இல்லை என்றும் அவர் வேறொருவர் என்றும் அதுவும் அவர் ஹாலிவுட் நடிகர் என்றும் ராணா டகுபதி கூறியுள்ளார். இந்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக ராணா டகுபதி பேசுகையில், பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா என்னிடம் வந்து, பாகுபலி படம் ஒரு போர் சார்ந்த படம் என்றும், என்னை வில்லனாக நடிக்கிறீர்களா? என்றும் கேட்டார். அதற்கு நான், இங்கு வருவதற்கு முன் நீங்கள் எந்த நடிகரை அனுகினீர்கள் எனக் கேட்டேன்.

அதற்கு அவர், ஹேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் அக்வா மேன் ஆகிய படங்களில் நடித்த ஜோசன் மோமோவாவை நடிக்க வைக்க அணுகியதாக கூறினார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறினார். அதன் பின்னர் இரண்டாவது தேர்வுதான் நான் எனக் கூறினார். அதன் பின்னர்தான் என்னிடம் வந்ததாகக் கூறினார்" இவ்வாறு ராணா டகுபதி கூறியுள்ளார். ராணா டகுபதியின் இந்த பேச்சு தற்போது தென்னிந்திய திரை உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











