திரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிகர் ராணா? அந்த கேரக்டரில் நடிக்க வைக்க திட்டம்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: திரிஷ்யம் 2 ரீமேக்கில் பிரபல நடிகர் ராணா டக்குபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Drishyam 2 Remakeல் Kamal நடிப்பாரா? | Kamal vs Mohanlal | Suyambulingam vs George Kutty

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியானது
திரிஷ்யம் திரைப்படம். இதில் மோகன் லால், மீனா, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில், கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் சீக்குவலாக திரிஷ்யம் 2 படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப்.

அமேஸான் பிரைமில்

அமேஸான் பிரைமில்

கடந்த 19ஆம் தேதி அமேஸான் பிரைமில் திரிஷ்யம் 2 திரைப்படம் வெளியானது. இதில் மோகன் லால், மீனா, எஸ்தர் அனில், அன்சிபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரில்லிங், டிவிஸ்ட் என ரசிகர்களை மிரள வைத்துள்ளது திரிஷ்யம் 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதனால் திரிஷ்யம் படத்தை போன்றே பல மொழிகளில் திரிஷ்யம் 2 படத்தையும் ரீமேக் செய்ய பல்வேறு மொழிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

தெலுங்கில் வெங்கடேஷ்

தெலுங்கில் வெங்கடேஷ்

'திரிஷ்யம்' முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்கிற்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ராணாவை நடிக்க வைக்க

ராணாவை நடிக்க வைக்க

மலையாளத்தில் திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் ஐஜி கதாபாத்திரம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் முரளிகோபி நடித்திருந்தார். இந்நிலையில், தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காடன் படத்தில்..

காடன் படத்தில்..

வெங்கடேஷும் ராணாவும் நெருங்கிய உறவினர்கள் என்பதால், இப்படத்தின் வாய்ப்பை ராணா நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது. காடன் மற்றும் அதன் தெலுங்கு பதிப்பான ஆரண்யா படத்தில் ராணா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: rana drishyam 2 ராணா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X