காதல் சின்னத்துக்குள்.. அதற்குள் நடிகர் ராணாவின் வருங்கால மனைவி செய்த காரியத்தை பார்த்தீங்களா?
சென்னை: நடிகை ராணாவின் காதலி, அதற்குள் செய்த காரியம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
இந்தி படங்களிலும் நடித்து வரும் இவர், இப்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்துள்ளார்.

கின்னஸில் இடம்
இந்த படம் இந்தி தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ளது. ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம் லாக்டவுன் காரணமாகத் தள்ளி போயிருக்கிறது. இதையடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராணா, பிரபலமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ராமநாயுடு, தனது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மூலம், 150 படங்களுக்கு மேல் தயாரித்து கின்னஸில் இடம்பிடித்தவர்.

மிஹீகா பஜாஜ்
இவரது தந்தை சுரேஷ்பாபு பிரபல தயாரிப்பாளர். சித்தப்பா, பிரபல தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ். நாகார்ஜுனா உட்பட சில திரைபிரபலங்கள் இவரது உறவினர்கள். நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருகிறார். அவர் தனது காதலை ஏற்றுக் கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் அறிவித்திருந்தார், ராணா.

இன்டீரியர் டிசைனர்
அவரது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த இன்டீரியர் டிசைனரான மிஹீகா பஜாஜ், 2018ஆம் ஆண்டு முதல் ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஈவென்ட் மேனேஜ்மென்ட், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார் மிஹீகா.

நடிகர், நடிகைகள்
தனது காதலை அறிவித்த ராணாவுக்கு நடிகர்கள் ஆர்யா, பிரபாஸ், சிரஞ்சீவி, நடிகைகள் சோனம் கபூர், ஸ்ருதிஹாசன், தமன்னா உட்பட பல நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் திருமணத்தை டிசம்பர் மாதத்துக்குள் நடத்த முடிவு செய்துள்ளதாக ராணாவின் தந்தை, தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறியிருந்தார்.

காதல் சின்னத்துக்குள்
இதற்கிடையே ராணாவின் காதலியும் வருங்கால மனைவியுமான மஹீகா, தனது கையில் ராணாவின் பெயரை பச்சைக்குத்தி உள்ளார். அதாவது, நடிகர் ராணா பெயரின் முதல் எழுத்தான R மற்றும் தனது பெயரின் முதல் எழுத்தான M இரண்டையும் காதல் சின்னத்துக்குள் வரைந்து பச்சைக்குத்தி உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











