கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்!
ஐதராபாத்: பிரபல நடிகர் ராணா- மிஹீகா திருமணம் ஐதராபாத்தில் மிகவும் எளிமையாக நடந்தது.
நடிகர் ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
மிஹீகா தனது காதலை ஏற்றுக் கொண்டதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார், ராணா.

கொரோனா பிரச்னை
ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ், ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆகஸ்ட் 8 (இன்று) ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

ராமநாயுடு ஸ்டுடீயோ
அதன்படி ஐதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டூடியோவில் இவர்கள் திருமணம் இன்று எளிமையாக நடந்தது. இந்த திருமணம் தெலுங்கு-மார்வாரி கலாச்சாரங்களின் ஒருங்கிணைப்பாக நடைபெற்றது. திருமணத்துக்காக ராமநாயுடு ஸ்டுடீயோ திருவிழா கோலம் பூண்டிருந்தது. விழாவில் நடிகர்கள் வெங்கடேஷ், நாக சைதன்யா, ராம் சரண் தேஜா, அவர் மனைவி உபாசனா, அல்லு அர்ஜூன், நடிகை சமந்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கொரோனா தீவிரம்
கொரோனா வைரஸ் பரவல் இந்தியா முழுவதும் தீவிரமாகி வருகிறது. ஐதராபாத்திலும் இந்த வைரஸ் தீவிரம் அடைந்து வருவதால் திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதன்பிறகே அவர்கள் திருமணம் நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அழைக்க முடியவில்லை
திருமணத்துக்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். இதுபற்றி நடிகர் ராணாவின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு சில நாட்களுக்கு முன் கூறும்போது, 'விழாவுக்கு 30 விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமணத்துக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சினிமா துறையில் உள்ள எனது நெருங்கிய நண்பர்களை கூட அழைக்க முடியவில்லை' என்று கூறியிருந்தார்.
Recommended Video

நடிகை சமந்தா
திருமணத்துக்கு முன்னதாக நடந்த மெஹந்தி விழாவில் நடிகர் ராணா குடும்பத்தினர் கலந்துகொண்டனர். நடிகை சமந்தா, அவர் கணவர் நாக சைதன்யா, நடிகர் வெங்கடேஷ், நாகார்ஜூனா ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை நடிகர் ராணா சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அது வைரலானது.


Click it and Unblock the Notifications











